என் பெயர் ஜெனி பென்சிஹெர்., நான் பட்டாபிராமம்., (சென்னை) பகுதியில் வசிக்கிறேன். நான் JASJEMI யூடூப் சேனலை கடந்த இரண்டு வருடமாக பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆவிக்குரிய வார்த்தைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த வருடம் 2023 நான் கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு வைரல் காய்ச்சல் இருந்தது. உங்களிடம் ஜெபிக்குமாறு 17-ஜூன்-2023 அன்று சொல்லியிருந்தேன். அந்த காய்ச்சல் என்னையும், என் கருவில் உள்ள பிள்ளையும் பாதிக்காமல் தேவன் ஜெபத்தை கேட்டு அடுத்தநாளே அற்புதமாக பெலன் கொடுத்து எனக்கு நல்ல சுகத்தை இயேசுகிறிஸ்து தந்தார். நான் பொதுவாக, மனதளவிலும்., உடலளவிலும் மிகவும் பெலவீனமானவள். சுகப்பிரசவத்தின் மூலம் நான் பிள்ளையை பெற்று எடுப்பேனா என்பது எனக்கு சாத்தியமில்லாதது. ஆனால் எனக்கு சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் நான் எப்படி அந்த வலியை தாங்கிக்கொள்ளுவேன் என்று எனக்கு தெரியாது. இயேசப்பா கிட்ட நான் கேட்டு இருந்தேன்., நான் JASJEMI சகோதரிகளிடமும் 25-நவம்பர்-2023 அன்று ஜெபிக்குமாறு கேட்டு கொண்டேன். ஆண்டவரின் மகத்தான கிருபையினால் என் தேவன் எனக்கு சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை கொடுத்து இருக்கிறார்.
சுகப்பிரசவ தேதி :
01-டிசம்பர்-2023., நேரம்: 04:03 PM.
என் இயேசப்பாவுக்கு ரொம்ப நன்றி., ஜெபித்த அனைவருக்கும் நன்றி., கர்த்தர் உங்களையும்., உங்கள் ஊழியத்தையும் மிகவும் ஆசீர்வதிப்பாராக., கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக., ஆமென்.