Testimony

இம்மானுவேல் (கரூர்).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. என்னுடைய பெயர் இம்மானுவேல் நான் 7 மாத குழந்தையாய் வயிற்றில் இருக்கும் போது என்னுடைய போதகர் மூலமாக இந்த பெயர் கொடுக்கப்பட்டது. நான் கரூரில் வசித்துவருகிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துவந்தேன். நான் போகும் எனது சபை ஊழியர் மூலமாக “நான் உன்னை குணமாக்குவேன்” என்று ஆண்டவர் திட்டமும் தெளிவுமாய் பேசினார். ஆனால் 9 மாதங்களாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் எனது சரீரத்தில் காணவில்லை. அந்த நேரத்தில் […]

பெயர் வெளியிட விரும்பாத சகோதரி.

நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தை சேர்ந்தவள். என்னோட சின்ன வயசுல இருந்தே ஆண்டவரை பிடிக்கும். ஏதோ எனக்கு தெரிஞ்ச முறையில் ஆண்டவரை பின்பற்றி வந்துட்டு இருந்தேன்., லாக்டவுன் ஒரு நாள் உங்க JASJEMI யூடியூப் சேனல் பார்த்தேன். உங்க வீடியோஸ் மூலமா நிறைய விஷயங்கள் ஆண்டவரை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உங்களோட ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதாக இருந்துச்சு. நான் காலேஜ் முடிச்சுட்டு அரசாங்க வேலைக்காக ஐந்து வருடம் முயற்ச்சி பண்ணிட்டு இருந்தேன்., எனக்கு கிடைக்கல. உங்க சேனல்ல […]

ரவிச்சந்திரன். (கோயம்புத்தூர்).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.. என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். நான் கோயம்புத்தூர் பட்டணத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு வியாபாரத்தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக சில மாதங்களாக ஒரு நல்ல இடத்தில் கடை வாடகைக்கு பார்த்து வந்தேன். சரியான இடத்தில் கடை அமையாத நிலையில் கடந்த 31/03/2021 அன்று பாஸ்டர் சுந்தர்சிங் ஐயா அவர்களிடம் போன் மூலமாக தொடர்பு கொண்டு என்னுடைய சூழ்நிலையை சொன்னேன். அவர் பல நிமிடங்கள் பேசி ஆறுதல் படுத்தினார். அவரிடம் சொன்ன […]

எஸ்தர் (சென்னை).

கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். அவருடைய நாம மகிமைக்காக ஒரு சாட்சி சொல்கிறேன். என் பெயர் எஸ்தர்.நான் ஒரு கிறிஸ்தவ பெண். என் கணவரும் கணவர் வீட்டில் உள்ளவர்களும் இரட்சிக்கப்படாமல் இருக்கிறார்கள் . நான் சில மாதங்களாக JasJemi சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் சென்னையில் வசிக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இரண்டாவதாக என்னுடைய மகன் வயிற்றில் இருக்கும் போது எனக்கு பிரஷர்(pressure)அதிகமானது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் எல்லாரும் பிரஷர் […]

தமிழ் மொழி (ஆத்தூர், சேலம்).

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நான் செய்கிற வேலையில் எனக்கு ஆசீர்வாதமே இல்லை, நான் செய்கிற வேலையில் எனக்கு Target இருக்கிறது, என்னுடைய owner கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். அப்பொழுது JASJEMI யூடூப்பில் வன்கண், பொறாமை பற்றி வீடியோவை நான் பார்க்கும்படி உணர்வு வந்தது, அன்று அதிகாலை அந்த வீடியோவை பார்த்தேன், சகோதரி சொன்னது போல நான் ஜெபித்ததும், என்னுடைய வேலையில் நல்ல மாற்றம் தெரிகிறது., […]

ரவிச்சந்திரன். கோவை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாட்சிக்காக கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். கோவை மாவட்டத்தில் குடும்பமாக வசித்து வருகிறோம். நான் கடந்த 04.08.2021 அன்று பாஸ்டர் சுந்தர் சிங் ஐயா அவர்களுக்கு வாட்ஸ்அப் ஆடியோ மூலமாக ஒரு ஜெப விண்ணப்பத்தை தெரியப்படுத்தினேன். எனது சகோதரி சத்தியசீலீ குடும்பத்தில் மிகவும் கடன் பிரச்சனைகளில் சிக்குண்டு தவித்து வருகிறார்கள்., இந்த கடன் பிரச்சனைகாகவும் அவர்கள் குடும்பமாக இரட்சிக்கப்படவும் ஜெபிக்க கேட்டுக்கொண்டேன். அன்றைய தினம் அவர் […]

ரவிச்சந்திரன் (கோயம்புத்தூர்).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. என்னை சாட்சியாக நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். நான் கோயம்புத்தூர் பட்டணத்தில் ஒரு சிறிய கடை வைத்து அதில் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளேன். கடந்த 22.3.2021 அன்று இரவு நான் மிகவும் சோர்வுக்குள் உள்ளானேன். கடையில் வியாபாரம் இல்லை,கடன் பிரச்சனை,வாடகை கொடுக்க முடியவில்லை, குடும்பத்தில் நல்ல விஷேசம் சுபகாரியம் தடை இவைகள் அனைத்தும் என் உள்ளத்தை மிகவும் அழுத்தியதால் அவிசுவாசமான வார்த்தைகள் […]

சோனியா (நெய்வேலி)

கர்த்தரின் மேலான நாமத்திற்கு ஸ்தோத்திரம். எனது பெயர் சோனியா.எனது ஊர் நெய்வேலி. எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. கர்த்தருடைய கிருபையால் இரண்டு மகன்கள் உள்ளனர். நான் கிறிஸ்தவள். ஆனால், ஆவிக்குரிய சபை சார்ந்தவள் அல்ல. 9 வருடங்களுக்கு முன்பு எனது கல்லூரி பருவத்தில் ஆண்டவர் ஒரு ஜெப கூட்டத்தில் கர்த்தர் என்னை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணி அந்நியபாஷை வரம் தந்தார். ஆனால், எனக்கு அதின் முக்கியத்துவம் மகிமை எதுவும் தெரியாது. அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்து […]

சியாமளா (ஆஸ்திரேலியா).

என்னுடைய பெயர் சியாமளா. நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன். நான் என்னுடைய சாட்சியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காக அர்ப்பணிக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நான் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் எனது நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன். நான் இயேசுவை பற்றி கற்றுக்கொள்ளவோ எந்த பாதை சரியான பாதை என்று எனக்கு சொல்லி தர யாருமில்லை. அதனால் நான் யூடியூப் இல் கிறிஸ்தவ சேனல்களை பின்பற்றி ஆண்டவரிடம் எப்படி நெருங்குவது, வேதத்தை எப்படி வாசிப்பது, என்பதை […]

Anne Roshini (Germany) Relative name: Antony,Clara,Livin

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம், ஆண்டவர் எங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய அற்புதத்தை செய்ததும் அன்றி எங்கள் குடும்பங்களை ஜெபிக்கும் பலிபீடங்களாக மாற்றியமைத்துள்ளார், அதற்காக தேவனுக்கு நன்றி. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று, எனது சித்தப்பா, சித்தி, மற்றும் அவர்களின் மகன் எல்லோருக்குமாக கொரோனா பாசிட்டிவ் வந்தது. எனது சித்தப்பா எலக்சன் டியூட்டி போய் இருந்திருக்கிறார் ஆதலால் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கூட தொற்று ஏற்பட்டுள்ளது. பயமும் ,பதற்றமும், கொண்டவர்களாக மருத்துவமனையில்அவரை சேர்த்தோம். சித்தப்பா குடும்பம் ஒரு […]