கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் என் பெயர் பவித்ரா, திருப்பத்தூர் மாவட்டம். நான் JASJEMI யூடூப் சேனலில் தேவனுடைய வார்த்தையை கேட்பதன் மூலம் என் ஆவிக்குரிய வாழ்வில் தாகம் அதிகரித்தது கடந்த ஆறு மாத காலமாய் பார்த்துக் கொண்டு வருகிறேன்., ஒருநாள் “ஒடுங்கின ஆவிக்கு பதிலாக துதியின் உடை” என்கிற வீடியோவை பார்த்தேன். அவர்கள் அதில் சொன்ன வசனத்தை எழுதி ஜெபித்து வந்தேன். பிறகு அபிஷேகத்தின் அளவு எனக்கு பெருகினது. சில காரணங்களால் ஆவியின் போராட்டத்தில் சிக்கிக்கொண்டேன். அதில் இருந்து விடுதலை பெற பரிசுத்த ஆவியானவரின் அக்கினி அபிஷேகத்தில் மிக மிக வாஞ்சையாய் இருந்தேன். அதே சேனலில் மீண்டும் “அக்கினி அபிஷேகம் எப்படி பெற வேண்டும் ஏன் நமக்கு அவசியம்” என்ற வீடியோ பார்த்தேன். அதில் அவர்கள் சொன்ன வசனத்தை எழுதிவைத்து தியானித்தேன். பிறகு ஒருநாள் “பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற ஜெபம்” என்ற வீடியோவை 01-நவம்பர்-2023 அன்று பார்த்து என்னை பரிசுத்த ஆவியானவரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். ஒரு தரிசனத்தில் அப்போஸ்தலர் மீது இறங்கின அந்த அக்கினி வானத்திலிருந்து புறப்பட கண்டேன்.. என்னை சுற்றிலும் நெருப்பும், அக்கினியும் கண்டேன். அது மட்டுமல்ல அக்னி மயமான நாவு பிரிந்து என் மேல் அமர்ந்தது. ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. பிறகு நேற்றைய தினம் இதே வீடியோவை வைத்து ஜெபித்தேன். என் மீது இருந்த கட்டுகள், குழப்பம், மன அழுத்தம், எல்லாம் நீங்கினது. என் இயேசு என்னுடைய வாழ்வில் விடுதலை தந்து விட்டார் என்று நான் விசுவசிக்கிறேன். இயேசு மட்டுமே மெய்யான விடுதலை தர கூடிய தெய்வம். பரிசுத்த ஆவியின் அக்கினியை கொண்டு என்னை விடுவிக்க என் இயேசு வல்லவர். இப்பொழுது ஒரு வாரமாக தினமும் அபிஷேகத்தில் ஒரு மணி நேரம் ஜெபிக்கிறேன். அப்போஸ்தலர் 2 : 4 படி அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்கு தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள். இப்படியாய் இயேசு கிறிஸ்து எனக்கும் செய்தார். JASJEMI சகோதரிகள் மூலமாக கர்த்தர் என்னை பரிசுத்த அக்கினியாய் மாற்றினார். சகோதரிகளுக்கு நன்றி. உங்கள் ஆவிக்குரிய நற்செய்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது., கர்த்தர் உங்களை பெருக பண்ணுவாராக. ஆமென்.