நந்தினி தாமஸ். (சிவகாசி)

என் பெயர் நந்தினி தாமஸ். நாங்கள் சிவகாசியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு திருமணம் 2015 May 15ல் நடைபெற்றது. ஆனால் குழந்தை இல்லாமல் இருந்தோம். 1 வருடம் ஆன பிறகு எல்லாரும் கேட்க ஆரம்பித்தார்கள். நாங்கள் போகாத Hospital இல்லை. சித்த மருத்துவம், Homeopathy, எல்லா இடத்துக்கும் போனோம். ஆனால் ஒரு முறை கூட நல்லது நடக்கல. ஒரு ஆச்சி எங்களுக்கு ஜெபம்பண்ணி சொன்னாங்க உபவாசம் இருந்து ஜெபம்பண்ணுங்க குழந்தை கிடைக்கும்னு. ஆனா நாங்கள் ஏற்கனவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசம் இருப்போம். அதனால நாங்க உபவாசம் இருக்கதான செய்றோம் அப்ப ஏதுக்கு இந்த ஆச்சி இப்படி சொல்றாங்க அப்படினு நினைத்தோம். அந்த சமயத்தில் தான் JasJemi Channel ல்” உபவாசம் எப்படி இருக்கனும் ” என்று நீங்கள் போட்ட வீடியோ பார்த்தேன். அப்பொழுது தான் உபவாசம் எப்படி இருக்கனும்னு புரிந்து நடந்துகிட்டேன். 2020 August-ல் 21 days Fasting prayer (21 நாட்கள் உபவாசம்) பண்ணினேன். அந்த ஜெபத்தை கர்த்தர் கேட்டு 2021 September-ல் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க உதவி செய்தார். Prayer எப்படி பண்ணனும், உபவாசம் எப்படி இருக்கனும்னு இந்த மாதிரி எல்லாம் உங்க வீடியோ பார்த்துதான் கற்று கொண்டேன். நீங்கள் போடுகிற எல்லா வீடியோவும் எனக்காகவே இருக்கும். தொடர்ந்து எங்களுக்காகவும் எங்கள் குழந்தைக்காகவும் ஜெபியுங்கள். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.

Thank you JESUS and JasJemi YouTube Channel.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.