என் பெயர் லோகேஷ், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்., நான் இரட்சிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றன., ஆனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை அறியாமல் இருந்தேன். பைபிள் படிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தேன். ஆனால் JASJEMI சிஸ்டர் யூடியூப் மூலமாக “பைபிள் வாசிக்க தொடங்குவது எப்படி” என்ற வீடியோ பார்த்த பிறகு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வேதம் வாசிக்க கர்த்தர் எனக்கு கிருபை கொடுத்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி., இயேசு முன்செல்கிறார் ஊழியர்களுக்கும், அவர்களுக்கு உதவி செய்கின்ற ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.