சோபி (சென்னை).

கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக என் பெயர் சோபி (சென்னை). இது ஒரு சாதாரண சாட்சி அல்ல. இயேசு கிறிஸ்து எங்களுக்கு செய்த மிகப்பெரிய அதிசயம். எனக்கு LKG படிக்கும் நான்கு வயது பெண் குழந்தை இருக்கிறாள். இரண்டாவதாக மார்ச் 8ஆம்தேதி 2023 அன்று ஒரு ஆண் குழந்தை (பிரனீத்) மகளிர் தினத்தன்று எனக்கு பிறந்தது. நார்மல் டெலிவரி தான். நல்ல எடையுடன் பிறந்தான். ஆனால், அதிகாலை ஐந்து மணிக்கு நான் குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் தோலில் போட்டு தடவி கொடுங்கள் சரியாகிவிடும் என்றார்கள். ஆனால் மூச்சு திணறல் நிற்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து என் மகனை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். 9 நாட்களுக்கு பிறகு தான் என் மகனை நான் திரும்ப பெற்றேன். வேளச்சேரியில் நியூ லைப் என்ற மருத்துவமனை உள்ளது. அங்கு பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் என் மகனை பரிசோதிப்பதற்காக மூக்கில் மற்றும் ஆங்காங்கே டியூப் வைத்திருந்தார்கள். ஒரு தாயாக என்னால் அதை பார்க்க முடியவில்லை. என் குடும்பம் ஒரு பாரம்பரியமான இந்து குடும்பம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் நான் இரட்சிக்கப்பட்டேன், ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டேன். இயேசுவின் மீது எனக்கு அதிக பாசம் உண்டு. நான் தவறாமல் ஜெபிப்பேன், பைபிள் படிப்பேன். நாங்கள் என் மகனுக்காக அழுது கொண்டிருந்தோம்.. டாக்டரை அழைத்து என்ன பிரச்சனை? என்று கேட்டோம்.டாக்டர்கள் இதயம் மற்றும் நுரையீரலை பரிசோதிக்க வேண்டும் என்றார்கள். பின்பு டாக்டர்கள் அவனை பரிசோதித்து விட்டு அவனை காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டார்கள். என் குழந்தையால் மூச்சு விட முடியவில்லை. இன்னும் இந்த குழந்தை இரண்டு நாளில் இறந்து விடும் என்றார்கள். அந்த நேரத்தில் என்னால் ஜெபிக்க கூட முடியவில்லை. மறுபடியும் ரத்த பரிசோதனை செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள். ரிசல்ட் வர 5 நாட்களாகும் என்றார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு என் குழந்தைக்கு Glutaric Acidemia type II (GA-2) என்ற நோய் உள்ளது என்று சொன்னார்கள். நம் உடலில் உள்ள 3 Enzymes (3 செல்கள்) ஒன்றுமே அவனுக்கு இல்லை என்றார்கள். அது ஒரு முக்கியமான செல். நம் கண்களால் அதை பார்க்க முடியாது. அந்த செல்லின் வேலை என்னவென்றால் நாம் சாப்பிடும் உணவை அது புரோட்டின்,கொழுப்பு,கார்போஹைட்ரேட் என்று தனித்தனியாக பிரித்து நம் உடலுக்குள் அனுப்பும்.. அதுதான் அந்த மூன்று செல்களின் வேலை. ஆனால் என் குழந்தைக்கு அந்த மூன்றும் இல்லை. இந்த செல்லை திரும்ப நம்மால் கொண்டு வர முடியாது. அந்த என்சைம்கள் இல்லாததால் அவன் குடித்த பால் ஆசிட் அமிலமாக மாறி மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த நோய் இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இருக்குமாம். இந்த நோய்க்கு மருந்தே இல்லை. இந்த நோய் மற்ற உள் உறுப்புகளையும் அழிக்கும். இதயம் மற்றும் நுரையீரலை பாதிக்கும். இந்த குழந்தையை மறந்து விடுங்கள். கண்ணுக்கு தெரிந்த உறுப்பு என்றால் சரிசெய்யலாம்.,  இது கண்ணுக்கே தெரியாத செல். இதை சரிசெய்ய முடியாது என்றார்கள். உங்களுக்கு சின்ன வயது தானே நீங்கள் இன்னொரு குழந்தைக்கு முயற்சியுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சில மருத்துவர்கள் அவனுடைய உறுப்புகள் நன்றாக இருப்பதாகவும், அதை நீங்கள் தானம் செய்யலாம் என்றும் கூட கூறினார்கள். ஒரு தாயாக என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நானும் என் கணவரும் எங்கள் வீட்டில் எல்லோரும் மிகவும் அழுதோம். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்பொழுது தான் நான் யதார்த்தமாக என் போனை எடுத்தேன். JASJEMI YOUTUBE சேனலில் இருந்து ஒரு சாட்சி நோட்டிபிகேஷன் வந்தது. அதில் ஒரு சாட்சியை நான் படிக்கும் போது அது என் கவனத்தை ஈர்த்தது. அந்த சாட்சி மார்ச் 4ஆம் தேதி குவைத்தில் இருந்து பிரியா பிரதீப் என்கிற சகோதரி எழுதிய சாட்சி. அவர்களுக்கு 40 வயது. அவர்களுக்கும் இதே போல் Autoimmune என்ற நோய் இருந்ததாகவும், அந்த நோய்க்கு மருந்தே இல்லை என்றும் வாழ்நாள் முழுவதும் அதை எதிர்த்து தான் போராட வேண்டுமென்றும், அது உறுப்புகளை அழிக்குமென்றும் கூறியிருந்தார்கள். இந்த அடையாளங்களும் என் குழந்தைக்கும் இருப்பதால் இந்த சாட்சி என்னை மிகவும் கவர்ந்தது. கடைசியில் அவர்கள் இயேசப்பாவிடம் ஜெபித்த போதும் பாஸ்டரும் அவர்களுக்காக ஜெபித்த போதும் கர்த்தர் அவர்களுக்கு சுகம் தந்ததாகவும் கூறியிருந்தார்கள். இதை பார்த்துவிட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டு இதை என் கணவரிடம் காண்பித்தேன். அவர் முதலில் இதை நம்பவில்லை. அது எப்படி சரியாகும்? என்று என்னிடம் சந்தேகமாக கேட்டார். இது சரியானால் இயேசுவை நம்புவீர்களா? என்று கேட்டேன்.. என் பையனுக்காக நான் எந்த முடிவுவரைக்கும் வேண்டுமானாலும் போவேன் என்று உனக்கு தெரியும். என் பையனை அந்த கடவுள் காப்பாற்றி கொடுத்தால் நிச்சயமாக உன்னோடு சர்ச்சுக்கு வருவேன் என்று சொன்னார். அதேபோல் எங்க அம்மாவிடம் சென்று சாட்சியை காண்பித்தேன். எங்கள் அம்மா தீவிர இந்து பக்தர். ஆனால் என் அம்மாவும் இதை படித்து விட்டு, இயேசு கடவுளே எப்படியாவது என் பேரனை காப்பாற்றி விடு. நான் திருநீர் பூசுவதையே நிறுத்தி விடுவேன் என்று அழுதார்கள். அவர்கள் திருநீர் இல்லாமல் வெளியே கூட செல்ல மாட்டார்கள். அந்த சாட்சியை வைத்துக்கொண்டு நாங்கள் ஜெபித்துக் கொண்டே இருந்தோம். அடுத்ததாக நாங்கள் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போனோம். அது ஒரு பெரிய மருத்துவமனை. அந்த டாக்டர் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்றார். அப்பொழுது டாக்டர்களிடம் மீண்டும் என்சைம்கள் (அந்த செல்கள்) வர வாய்ப்பு இருக்கிறதா என்று நான் கேட்டேன். அவர்கள் அதற்கு வாய்ப்பே இல்லை. இது என்ன மேஜிக்கா? என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து பெங்களூர் அனுப்பி வைத்தார்கள். மிகவும் பதட்டத்தோடு சில நாட்கள் கழித்து ரிப்போர்ட்டை வாங்குவதற்காக சென்றோம். நான் ஸ்தோத்திர பலி புத்தகத்தை பலமுறை படித்து ஸ்தோத்திரம் செலுத்தி வந்தேன். ரத்த பரிசோதனை வந்த பிறகு டாக்டரம்மா என்னை கூப்பிட்டு அந்த ரிப்போர்ட்டை திருப்பி திருப்பி பார்த்தார்கள்.நாங்கள் பதட்டத்தில் உட்கார்ந்து இருந்தோம்.. என்ன சொல்லப் போகிறார்கள் என்று கேட்பதற்காக.. டாக்டர் எங்களிடம்:  “இது ஒரு அதிசயம்”.. இந்த வியாதிக்கான மருந்தை இனி குழந்தைக்கு கொடுக்க தேவையில்லை., இவன் முழுவதும் சரியாகிவிட்டான் என்றார்கள். என் கணவர் என்னை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார். இப்போது இந்த குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது. என் மகன் இப்பொழுது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான். உங்கள் JASJEMI YOUTUBE சேனலில் வெளியிட்ட சாட்சி மூலமாக என்னுடைய விசுவாசம் கட்டி எழுப்பப்பட்டு என் வாழ்க்கையில் பெரிய அதிசயம் நடந்திருக்கிறது. நான் அநேக சாட்சிகளை கேன்சர் கட்டிகள் மறைவது இதுபோன்ற அனேக சாட்சிகள் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நான் அதை பார்த்தது இல்லை, ஆனால் பிறவியிலேயே வரும் ஒரு குறைபாட்டை இயேசு கிறிஸ்துவை தவிர யாராலும் குணமாக்க முடியாது என்று இப்போது விசுவாசிக்கிறேன்.. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயம். என் மகன் மூலம் இதை நான் பார்த்தேன். நான் என் மகனை ஊழியத்துக்கு அர்ப்பணித்து இருக்கிறேன். உங்கள் சேனலுக்காக, உங்கள் ஊழியத்துக்காக நான் தினமும் ஜெபிக்கிறேன். எங்கள் குடும்பத்திற்க்காக தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய நாமம் இந்த சாட்சி மூலம் மகிமைப்படுவதாக.. ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

2 thoughts on “சோபி (சென்னை).

  1. நன்றி இயேசு அப்பா.
    நீங்கள் செய்ய அற்புதத்திற்காக தோத்திரம். உம்முடைய நாமம் மட்டும் மகிமைபடட்டும் ஆமேன்.

Leave a Reply

Your email address will not be published.