பெயர் வெளியிட விரும்பாத சகோதரி.

நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தை சேர்ந்தவள். என்னோட சின்ன வயசுல இருந்தே ஆண்டவரை பிடிக்கும். ஏதோ எனக்கு தெரிஞ்ச முறையில் ஆண்டவரை பின்பற்றி வந்துட்டு இருந்தேன்., லாக்டவுன் ஒரு நாள் உங்க JASJEMI யூடியூப் சேனல் பார்த்தேன். உங்க வீடியோஸ் மூலமா நிறைய விஷயங்கள் ஆண்டவரை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உங்களோட ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதாக இருந்துச்சு. நான் காலேஜ் முடிச்சுட்டு அரசாங்க வேலைக்காக ஐந்து வருடம் முயற்ச்சி பண்ணிட்டு இருந்தேன்., எனக்கு கிடைக்கல. உங்க சேனல்ல வருகின்ற சாட்சி எல்லாம் படிப்பேன் எனக்கும் வேலை கிடைச்சா நாமளும் இதுமாதிரி சாட்சி சொல்லனும்னு நெனைப்பேன். அதுக்காக ஆண்டவர் கிட்ட விசுவாசத்தோடு வேண்டினேன். ஆண்டவர் கிட்ட எப்படி வேண்டுதல் செய்யணும்னு கூட எனக்கு சரியா தெரியாது இதுவரைக்கும் அது எல்லாமே உங்க வீடியோஸ் மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ எனக்கு வேலை கிடைச்சிருக்கு., இது எல்லாமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் தான் நடந்து இருக்கு. நான் ஆண்டவரைப் பற்றி நிறைய தெரிஞ்சுக்க உங்க வீடியோஸ் பார்க்க வைத்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி., உங்களுக்கும் நன்றி. நீங்க இன்னும் நிறைய வீடியோஸ் போடணும் என்ன மாதிரி நிறைய பேரு பயன்பெருவாங்க. கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக, ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

2 thoughts on “பெயர் வெளியிட விரும்பாத சகோதரி.

  1. Super sister thavanuke makimai undavathaga amen appaaa
    Sister naanum appavai ariyatha kudumpalthil ullaval nanum En appavin pillaya ennai oppokuduthullen akka nan En appavai mulumaiyai visuvachikiren sister na government job paduchukittu erukke akkaa enaku 9.1.2022 exam akka enaku Entha job venumnu En kitta ventierukke sister ana na exam ku apply pannum pothu mistake pannite sister athanal na migavum varuthene sis
    Eruthalum En thagapper enakkaga yavaium seithu mudiparnu na en mulumanathodu visuvasikkiren sis kandipa En appa Entha job enaku tharuvar nanum ungalaipola kandipa appakkaga Sachin koduppen sister
    En salary oru panku En appavukkaga eppavum nan mulumanathodu santhosathodu kudupen sister nanum En appavum vakkukuduthirukom sister pls sister ennakkaga appa kitta preyar pannunga sis pls enaku Entha jobs kandipa venum enga family la rompa mani problem sister pls preyar me 🙏🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published.