அபிதா. (கன்னியாகுமரி)

என்னுடைய பெயர் அபிதா. என் அண்ணி பெயர் ஷானி. அவர்கள் வயிற்றில் கட்டி இருந்தது. அதினால் மூளைக்கு செல்லும் நரம்புகளில் oxygen செல்ல முடியாமல் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆரோக்கியம்(Critical Condition) மிகவும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்த்தோம்.சிகிச்சை பல நடந்தது. ஆனால், பெரிதான முன்னேற்றத்தை காண முடியவில்லை.அவர்கள் பேசவோ நடக்கவோ முடியாத நிலையில் படுக்கையில் இருந்தார்கள். ஆனால் கர்த்தர் ஜீவனை காத்து நடத்தி வந்தார். நவம்பர் முடிந்தது. ஆனாலும் ICU வில் இருந்து வெளியே வரவில்லை .மிகவும் சோர்ந்து போனோம்.இரத்தத்தில் Infection ஏற்பட்டது. சரியான சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில் Doctors இருந்தார்கள். Pastor கிட்ட ஜெபிக்க சொன்னோம். அவர்களும் ஜெபித்தார்கள். டிசம்பர் மாதம்  தொடக்கம் முதல் jasjemi channel லில் “காரியம் மாறுதலாய் முடிந்தது“என்ற தலைப்பில் ஒளிபரப்பான பதிவுகள் ஒவ்வொன்றும் பார்த்து விசுவாசத்தோடு ஜெபித்து வந்தேன். இயேசப்பா இந்த மாதம் எங்களுக்கும் காரியம் மாறுதலாய் முடிய பண்ணுங்க என்று ஜெபித்து வந்தேன். டிசம்பர் மாதம் 31 அன்று ICU வில் இருந்து சாதாரண வார்டுக்கு(General Ward) வர கர்த்தர் உதவி செய்தார்.. காரியம் மாறுதலாய் முடிய பண்ணினார் கர்த்தர். எங்களுக்கு அந்த வாக்குத்தத்தை சுதந்தரிக்க செய்தார். என் அண்ணியை காத்த இயேசுவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். இப்போதும் காத்து கொண்டு வருகின்ற இயேசுவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். இந்த சாட்சியை பார்க்கிற அனைவரும் என் அண்ணி ஷானி க்காக தொடர்ந்து ஜெபியுங்கள். சீக்கிரம் அவர்கள் படுக்கையில் இருந்து எழுந்து பரிபூரண சுகம் பெற்று இது போன்று சாட்சி சொல்ல வேண்டுமென்று ஜெபியுங்கள்.  இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி. உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் நன்றி. கர்த்தருடைய நாமம் இந்த சாட்சியின் மூலம் மகிமைப்படுவதாக. ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.