பெயர் வெளியிட விரும்பாத சகோதரி.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
என்னுடைய குடும்பத்தில் நான் மட்டுமே இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளேன்.JasJemi YouTube Channel எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. இதன் மூலமாக நான் நிறைய கற்றுக்கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு நான் மரண பயத்திற்கும், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுதலை பெறவும் ஜெபிக்குமாறு பாஸ்டரிடம் கேட்டு கொண்டேன்.  “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்”-ணு சொல்லுங்க, சரி ஆகும், உங்களுக்காக நாங்களும் ஜெபிக்கிறோம் என்று பாஸ்டர் சொன்னார்கள். இப்பொழுது எனக்கு சுகம் ஆகி விட்டது. ஜெபத்திற்கு பதில் தந்த இயேசப்பாவிற்கு ஸ்தோத்திரம். ஜெபம் செய்த உங்களுக்கும் நன்றி. நான் Teacher Training Exam ல Maths paper  மட்டும் fail ஆகி விட்டேன். 3 வருடம் எழுதியும் pass ஆகவில்லை. அதற்கும் ஜெபிக்க சொன்னேன். ஜெபத்திற்கு இயேசப்பா எனக்கு 78 Marks தந்து என்னை pass பண்ண வச்சிட்டாரு. (B.A) தமிழ் distance education ல சேர போறவதற்காக ஜெபிக்க சொன்னேன். இப்பொழுது சேர்ந்து விட்டேன். இந்த படிப்பை சரியாக படித்து முடிக்க ஜெபம் செய்யவும். என்னுடைய ஜெப குறிப்புக்கு ஜெப உதவி செய்த உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் நன்றி பாஸ்டர். இயேசு கிறிஸ்துவுக்கே சகல துதி, கனம், மகிமை, உண்டாவதாக., பதில் தந்த இயேசு அப்பாவிற்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள். ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.