ரூபி ஏஞ்சல்., (ராமநாதபுரம் மாவட்டம்).

என்னுடைய பெயர் ரூபி ஏஞ்சல்., நான் ராமநாதபுரம் மாவட்டதில் வசிக்கிறேன். எனக்கு திருமணம் தடை ஆகிக்கொண்டே இருந்தது. மூன்று வருடத்திற்கு மேலாக எனக்கு திருமண வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அமையவில்லை எனக்காக ஜெபிக்க கேட்டுக் கொண்டேன்.. எனக்காக பாஸ்டர் ஜெபித்தர்கள். JASJEMI Youtube சேனலை நான் தினமும் பார்ப்பேன். என்னுடைய வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. கடவுள் கிருபையில் எனக்கு ஒரு நல்ல திருமண வரன் அமைந்தது., ஆனால் எனக்குள் ஒருவித பயம் இருந்தது அதற்காகவும் ஜெபிக்க சொன்னேன்., கொஞ்சம் ஆலோசனையும் பாஸ்டர் எனக்காக கொடுத்தார்கள். நான் தினமும் ஜெபிக்கும் பொழுது தேவனுடைய பெரிதான கிருபையினால் பிப்ரவரி 2022 16ஆம் தேதியில் நல்லபடியாக எனக்கு திருமணம் நடைபெற்றது.. என்னுடைய பயத்தில் இருந்து தேவன் எனக்கு விடுதலை தந்தார். ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி., ஜெபித்த பாஸ்டருக்கு நன்றி செலுத்துகிறேன். நான் இப்பொழுது கர்ப்பிணியாக இருக்கின்றேன். தேவன் ஒன்பது மாதம் என்னை பாதுகாக்கணும் அதற்காகவும் ஜெபித்துக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

 

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

4 thoughts on “ரூபி ஏஞ்சல்., (ராமநாதபுரம் மாவட்டம்).

  1. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  2. Praise the lord sisters

    உங்களது யூடியூப் சேனலை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் எனது ஆவிக்குரிய வாழ்க்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது அதற்காக நன்றி இன்னும் உங்களது ஊழியும் வளர நான் ஜெபிக்கிறேன் எனக்காக நீங்கள் அநேக ஜபக் குறிப்புகள் நான் உங்களிடத்தில் கொடுத்துள்ளேன் எனக்காக நீங்கள் ஜெபிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நிச்சயமாக நான் உங்கள் இடத்தில் சாட்சி சொல்லுவேன் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவேன். உங்களது இந்த சேவை இந்திய நாட்டுக்கு தேவை.

  3. I’m desperately needing in God’s breakthrough,miracle, blessings in every aspect of my life viz spiritual, health, financial, etc. Desperate for joy of the Lord, God’s heavenly peace, promises. Desperate for God’s divine touch, intervention. Surrendered to God.

Leave a Reply

Your email address will not be published.