பிரியா பிரதீப்.,குவைத்

என்னுடைய பெயர் பிரியா பிரதீப். நான் குவைத்தில் வசிக்கிறேன். எனக்கு 40 வயது., கடந்த இரண்டு வருடமாக எனக்கு வியாதி இருக்கிறது என்று தெரியாமல் மிகவும் கஷ்டபட்டேன். சிகிச்சைக்காக நான் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றேன். ஒவ்வொருமுறையும் இரத்த பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன், என்டோஸ்கோபி எடுத்து பார்த்தோம்., ஆனால் எனக்கு வியாதியும் சரியாகவில்லை., என்னுடைய பணமும் செலவழிந்தது.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது., எனக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க.. என்னுடைய குடும்பத்தை நான் சரியா பாத்துக்கவே முடியவில்லை. சில சிகிச்சைக்கு பின்பு எனக்கு {தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள்} (Autoimmune diseases) இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.இந்த வகையான வியாதிக்கு மருந்து கிடையாது.. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் இந்த வியாதியுடன் யுத்தம்பண்ணி கொண்டு தான் இருக்க வேண்டும் என்று நிறைய டாக்டர் சொன்னார்கள். இது உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் வியாதி என்று கூறினார்கள்.. நான் ஒருநாள் 6மணிக்கு ஒரு சிறிய ஜெபம் செய்தேன்., ஆண்டவரை பாடி துதித்தேன்.. ஜெபத்தில் நான் ஆண்டவரிடம் எனக்கு ஒரு அற்புதம் நடக்காத, என்னுடைய இந்த வியாதி மாறாத ஆண்டவரே என்று ஜெபித்து கொண்டிருந்தேன்.. அடுத்த நாள் நான் மருத்துவமனைக்கு வியாதியின் வலியோடு தான் சென்றேன். என்னுடைய வலியை பற்றி டாக்டர் எதுவும் கேட்டகவில்லை.. உங்களுக்கு நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது என்று சொன்னார்கள்.. இந்த வியாதி உங்களுக்கு இல்லை என்று சொன்னார்கள். இதை கேட்டவுடன் மிகப்பெரிய ஆச்சரியம்., மிகப்பெரிய சந்தோஷம்.எனக்குள் உள்ள மாற்றத்தை என்னால் உணரமுடிந்தது.. போதகர் ஐயா அவர்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி செலுத்துகிறேன். அவரிடம் இரண்டு வருடமாக ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.. அவர்களும் எனக்காக ஊக்கமாக ஜெபித்தார்கள். சில நாட்கள் ஆண்டவர் இருக்கிறாரா இல்லையா என்று யோசித்து கூட இருக்கிறேன். ஆனால் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது ஆண்டவர் நிச்சயமாக என்னுடைய ஜெபத்திற்கு பதில் தருவார் என்று.. என் தேவன் என்னை வியாதியிலிருந்து மாற்றினார்.. அவரை போல் உண்மையான தெய்வம் இந்த உலகத்தில் இல்லை. இது என்னுடைய உண்மையான அனுபவம்.. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மட்டுமே துதி, கனம், மகிமை உண்டாவதாக.. ஆமென் ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

2 thoughts on “பிரியா பிரதீப்.,குவைத்

  1. In 11th public exam I got less mark I felt sad seeing my parents hardwork now I am studing 12th in present I am writing public exam I have completed 3exams remaining 3exams there so in 12th i want take atleast 500&500above i want to make my parents to happy I am very fear and afraid for my results pls pray for me to get more marks and my brother is disabled he can’t speak pray for him also akka pray for all the students those who writing public exams

  2. என் மனைவிக்கு சுக பிரசவம் ஆகனும் அதற்காக ஜெபிங்க பண கஷ்டம் அதிகமா இருக்கு 😔 என் பெயர் peter மனைவி பெயர் பிரியா ஜெபியுங்கள்

Leave a Reply

Your email address will not be published.