வேதத்தை தியானிப்பது எப்படி?

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:2

இந்த இடத்தில இரவும் பகலும் வாசிக்கிற மனுஷன் அப்படினு இல்ல தியானிக்கிற மனுஷன். தியானித்தல் ஒரே ஒரு வசனத்தின் மீது அல்லது ஒரே ஒரு வார்த்தையின் மீது / அல்லது ஒரே ஒரு சம்பவத்தின் மீது நம்முடைய கவனத்தை செலுத்தும்போது கர்த்தர் அதன் மூலம் நம்மோடு பேசுகிறார்.

ஒரு வேளை பைபிள் படிக்க உங்களுக்கு ஒரு சரியான ஆர்வம் இல்லை அல்லது பைபிள் படிக்கவே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள் அல்லது யாராவது தினமும் உங்களை ஞாபகப்படுத்தி,

ஒரு கட்டாயத்தின் பேரில் தான் தினமும் பைபிள் படிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இன்னும் வேதத்தை தியானிக்கும் அனுபவத்திற்குள் சரியாக வரவில்லை என்றே அர்த்தம்.

வேதத்தை தியானிப்பது என்பது நம் ஆவிக்குரிய மனிதனுக்கு நாம் கொடுக்கும் உணவு.

நாம் மாம்சத்தின் மனிதனுக்கு தினமும் சாப்பிட ஞாபகப்படுத்த வேண்டுவதில்லை.

ஏனென்றால் பொதுவாக எந்த நேரத்தில் வேதத்தை தியானிக்க வேண்டும் என்றால், காலையில் எந்தவொரு வேளையும் செய்ய முன்பே வேதத்தை தியானிப்பது மிகவும் நல்லது.

என்னுடைய personal experience எடுத்துக்கொண்டால், காலையில் எவ்வளவு வேலை இருந்தாலும், இயல்பாக எழுவதற்கு ஒரு 1/2 மணி நேரத்திற்கு முன்பாகவே எழுத்து வேதத்தை தியானிப்பது மிகவும் நல்லது.

ஏன் காலையிலே வேதத்தை தியானிப்பது நல்லது என்றால் வேதத்தை தியானிக்கும் போது ஆவியானவர்..

1. அந்த நாளுக்கு தேவையான அறிவுரைகள் தருவார். 2. நம்பிக்கையின் வார்த்தைகள் அந்த நாளில் ஒரு வேளை ஒரு பிரச்சனையில் அகப்பட நமக்கு ஒரு நம்பிக்கையின் வார்த்தைகள் வரும்போது, அதை எதிர்கொள்ளவதற்கு தேவையான தெம்பு கிடைக்கிறது.

3.ஏதிர்கால நம்பிக்கை, 4.எச்சரிப்பின் வார்த்தை, 5. நாம் ஜெபிக்கிற ஜெபத்திற்கு ஒரு பதிலாக இருக்கும்.

காலையிலே ஒரு அமைதியான இடத்தில் அல்லது நமக்கு பிடித்தமனா ஒரு இடத்தில் உட்கார்ந்து, அந்த நாளில் தேவன் நம்மோடு பேசுகிற வார்த்தையை நாம் தியானிக்கும்போது ஒரு மெய்யான சமாதானம், ஒரு மன அமைதி கிடைக்கிறது.

காலையிலே நாம் தியானிக்கும் போது அந்த வசனம், கிறிஸ்து பேசிய அந்த வார்த்தை

அந்த நாள் முழுவதும் அநேக முறை நாம் திரும்ப திரும்ப அந்த வார்தையை நினைவு கூறுவதால் நம்முடைய ஆழ் மனதிற்கும் போகிறது . யோபு 23:12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை. அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்துக்கொண்டேன் . நன்மைகள்:

1. சங் 1:3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியை தந்து, இலையுதிராயிருக்கிற மரத்தைப்போலிருப்பான்., அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

2. யேசுவா 1:8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம்உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்ப- -தாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம்

நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். அப்பொழுது புத்திமானுமாய் நடந்துகொள்ளுவாய். முதலாவது நன்மை வேதத்தை தியானிக்கிற மனுஷன் செய்வது எல்லாமே வாய்க்கும். ஏன் என்றால், கர்த்தர் என்ன செய்ய சொல்கிறாரோ அதற்கு அவன் அப்படியே கீழ்ப்படிகிறான். எசேக் 22:30 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். இப்போ இந்த வசனத்தை தந்தால், தேவன் நம்மை தேசத்திற்காக ஜெபிக்கும்படியாய் அறிவுறுத்துகிறார் என்று உணர்ந்து அதற்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும். சில நேரம் முதன்முறை நமக்கு தேவன் ஒரு வசனத்தை காண்பிக்கும்போது, உடனே அதன் மூலம் தேவன் என்ன சொல்ல வருகிறார் என்று உடனே நமக்கு

புரியாவிட்டாலும், தொடர்ந்து தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆவியானவரே இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல, எனக்கு புரிய வைங்கன்னு சொல்லும்போது ஆவியானவர் புரிய வைப்பார். அடுத்ததாக ஒரு உதாரணம் பார்க்கலாம்.

இப்போ கர்த்தருடைய வேதத்தை வாசிக்கும்போது

1 நாளாகமம் 11:5 தருகிறார் என்று வைத்து கொள்வோம். அப்பொழுது எபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. இதன் மூலம் தேவன் நம்மிடம் என்ன சொல்கிறார் என்றால், உன்னை சுற்றிலும் இருக்கிற மனிதர்கள் உன்னை ஊக்குவிக்கவில்லை- -யென்றாலும் நீ அந்த காரியத்தை தாவீதைப் போல் செய்து முடிக்க வேண்டும். அடுத்த உதாரணம்: எண்ணாகமம் 11:14,15 ல் இப்படியாக ஜெபிக்கிறார். இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான். மோசே தன்னுடைய சாவை விரும்பும் அது மிக பெரிய பாரமாய் இருந்தது. அப்பொழுது தேவன் மோசேக்கு பதிலளிக்கிறார். எண்ணாகமம் 11:16,17 ல் அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய். அப்பொழுது நான் இறங்கிவந்து அங்கே

உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன். இதன் மூலம் தேவன் நம்மிடம் என்ன சொல்கிறார் என்றால், நம்முடைய வீட்டிலோ,வேலை செய்யும் இடத்திலோ, சபையிலோ நாம் ஒருவராய் எல்லா பொறுப்புகளையும் நாமே சுமந்து கொண்டிருந்தால், அந்த பொறுப்புகளை பலருக்கு பிரித்துக்கொடுக்கும்படியாய் அறிவுறுத்துகிறார். இப்படித்தான் வேதம் வாசிக்கும்போது தேவன் நமக்கு தரும் வசனத்தின் அர்த்தத்தை ஆவியானவர் துணையோடு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். ஆமென்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.