மகிழ்ச்சி என்பது எல்லோரும் விரும்புகிற ஒரு காரியம். அதாவது நமக்கு உயிர் உள்ள வரை எல்லா வயதினரும் மகிழ்ச்சி எனக்கு வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன்னா எப்பொழுதுமே மனிதன் வந்து சந்தோஷமாக இருப்பதே விரும்புகிறான்.அது நல்ல வழியாக சந்தோஷமாக இருந்தாலும் சரி ,தீய வழியாக சந்தோசமாக இருந்தாலும் சரி, சிலபேர் நரகத்திற்கு செல்லக்கூடிய துன்மார்க்கர்கள் அதாவது பொல்லாதவர்கள் அவர்கள் தீமைகளை செய்து மகிழ்ச்சியாய் இருப்போம் என்று சொல்லி நிறைய கெட்ட பழக்கவழக்கங்களில் அதாவது கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு அதிகமான மகிழ்ச்சியை பெற்றுக்கொண்டு இதுதான் எனக்கு சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். அதுபோல நல்லவர்களும் நல்வழியில் மகிழ்ச்சியை பெற்றுக் கொள்கிறார்கள். எல்லா வயதினருக்கும், ஒரு சிறுபிள்ளைக்கு கூட சாக்லேட் வாங்குவது, ஐஸ்கிரீம் வாங்குவது அதுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதைப்போல வாலிப வயதில் ஒரு கற்பனை உலகத்திலேயே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் .அதாவது ஒரு திருமண காரியம் நடக்கும் போது தனக்கு வரப்போகிற துணை எப்படி இருப்பார்கள் என்று நினைத்து அதில் மகிழ்ச்சி கொள்வார்கள். அப்புறம் தனக்கு ஒரு குழந்தை வர வேண்டும் என்று சொல்லி அதில் மகிழ்ச்சி அடைவார்கள். இப்படி ஒவ்வொரு வயதினரும் ஒவ்வொரு மகிழ்ச்சி அடைவார்கள். இப்படி எல்லா வயதினருக்கும் மகிழ்ச்சி தேவையாயிருக்கிறது .ஒவ்வொரு நாளுக்கும் நமக்கு மகிழ்ச்சி தேவையாயிருக்கிறது. சில பேர் காலையிலேயே நமக்கு நல்ல காரியங்கள் தான் நடக்கணும், நல்ல வார்த்தைகள் தான் நாம் கேக்கணும், அப்படி நினைத்துக் கொண்டே இருப்பார்கள். வேலைக்கு வரும்போது மகிழ்ச்சியாய் இருக்கணும், மகிழ்ச்சியாக போகணும், அப்பதான் அந்த நாள் முழுவதும் நமக்கு நல்லபடியாக அமையும் என்று நினைப்பார்கள். இப்படி எல்லா மனிதர்களுக்கும் மகிழ்ச்சி ரொம்ப முக்கியமா இருக்கிறது. ஆனால் ,அதை வந்து நாம் ஒவ்வொருநாளும் எப்படிப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பது தான் முக்கியம். இப்போ உலகத்தில உள்ள ஏதாவது ஒரு காரியத்தை செய்யும்போது செய்து மகிழ்ச்சி அடையலாம். அப்படி செய்யும்போது அவங்களுக்கு ஒரு தற்காலிகமான மகிழ்ச்சி தான் கிடைக்குது. ஆனால் ,நிரந்தரமான ஒரு மகிழ்ச்சி எப்படி நம்ம பெறுவது என்பது ஆண்டவருடைய வசனம் மிகத் தெளிவாக நமக்கு சொல்கிறது .இயேசுவை ஏற்றுக்கொண்ட மனிதர்கள் மகிழ்ச்சியை எப்படி பெறுவார்கள் என்பதை வேதம் சில வழிமுறைகளை சொல்லுகிறது. சங்கீதம் 97 :11 ல் நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.

இதில் என்ன சொல்கிறார்கள் என்றால் ,செம்மையான இருதயமாக நம்முடைய இருதயத்தை மாற்றிக் கொண்டால், நம்முடைய இருதயம் செம்மையாக இருந்தால் ,கர்த்தர் மகிழ்ச்சியை நமக்குள் முதலில் விதைக்கிறார். நாம் ஒரு நல்ல தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும். செம்மையான இருதயம் மட்டுமே எனக்கு இருக்க வேண்டும். குறுகிய இருதயம் எனக்கு இருக்கக்கூடாது, ஒரு கெட்ட இருதயம் இருக்கக்கூடாது, நல்ல ஒரு இருதயம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நாம் என்றைக்கு தீர்மானம் பண்ணிகிறோமோ, அன்றைக்கே தேவன் நமக்குள் மகிழ்ச்சி எனும் ஒரு விதையை விதைக்கிறார். விதை விதைக்கும் போது அது தெரியாது. விதை விதைத்து கொஞ்சநாளைக்கு அது நமக்கு தெரியாது. ஆண்டவர் அதை விதைத்து அதற்கு தேவையான தண்ணீரை வந்து நீர் பாய்ச்சிக்கொண்டே இருப்பார் .நம்ம தீர்மானம் எடுக்கும் போது அதற்கு தேவையான கிருபைகளை கொடுப்பார்.தண்ணீர் என்பது கிருபையைக் காட்டுகிறது. செம்மையான இருதயம் மட்டுமே எனக்கு வேண்டும் என்கிற தீர்மானத்தில் நாம் தொடர்ந்து பிரயாசப்பட்டு கொண்டு இருக்கும் போது தேவன் அந்த விதைத்ததான விதையிலிருந்து ஒரு துளிர் வர வைப்பார் .அது கொஞ்ச நாள் கழிந்த பின்பு வெளியே வரும் .வெளியே வரும்போது தான் நமக்கு மகிழ்ச்சி என்கிறதான ஒரு பகுதி தெரியும் .அந்த விதை வந்து துளிர்விடும் போதுதான் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதனால் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரு நல்ல தீர்மானம் எடுக்க வேண்டும். உண்மையான இருதயம் எனக்கு வேணும் ஆண்டவரே ,அந்த இருதயத்தில் மற்றவர்களை கெடுக்கிற காரியமோ, மற்றவர்களுக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி காரியங்கள் எதுவுமே காணப்படக் கூடாது .மற்றவர்களுக்கு உதவி செய்வது,மற்றவர்களுக்காக பாடுபடுகிறது போன்ற ஒரு இருதயம் எனக்கு வேணும் ஆண்டவரே என்று

சொல்லி ஒரு தீர்மானம் எடுக்கும் போது தேவன் மகிழ்ச்சியை தருகிறார். இதைத்தான் சங்கீத 30:11ல் வாசிக்கிறோம். என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி என்பது வேண்டும் என்று சொன்னால் நாம் தான் அதை தீர்மானிக்க வேண்டும்.மகிழ்ச்சி வேண்டுமா? அல்லது புலம்பல் வேண்டுமா? என்கிற தீர்மானத்தை நாம் தான் எடுக்க வேண்டும்.அதுதான் சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டவரே எனக்கு மகிழ்ச்சிதான் வேண்டும் என்று நான் கெஞ்சினேன், அப்பொழுது கர்த்தர் என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறினார் என்று. அதனுடைய அர்த்தம் அதுதான் .நாம் தீர்மானம் பண்ண வேண்டும் .என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டும் ஆண்டவரே! என்று சொல்லும்போது ஆண்டவர் விதைப்பார். தொடர்ந்து அந்த செம்மையான இருதயத்திற்கு நாம் ஒப்புக்கொடுக்க ஒப்புக்கொடுக்க தேவன் நமக்கு ஒரு பெரிதான மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் தருவார். அதுதான் அதில் முக்கியமானது. ஒரு மரத்தின் விதை அப்படியே மேல வந்து துளிர்விடுதுன்னு வையுங்களேன்,

ஆண்டவர் கிருபையில அது நல்லா வளர்ந்து வாழ்நாள் முழுவதும் அநேகருக்கு பிரயோஜனமான ஒரு மரமாக காணப்படும். அதான் மகிழ்ச்சி.
மகிழ்ச்சி என்கிற ஒரு ஆசீர்வாதத்தை தேவன் செம்மையான இருதயத்துக்கு மட்டும் கொடுக்கிறார். செம்மையான இருதயம் யார் வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்களுக்கு தேவன் நிச்சயமாய் மகிழ்ச்சி என்னும் ஒரு ஆசிர்வாதத்தை கட்டளையிடுகிறார்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்..