புதிதாக பைபிள் வாசிக்கத் தொடங்குபவர்கள் எந்தப் பகுதியிலிருந்து வாசிக்கலாம் என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம்., வேதாகம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளது. பழைய ஏற்பாடு புத்தகத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக உள்ள செய்திகள் உள்ளது., புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து பிறந்ததற்கு பின்பாக உள்ள செய்திகள் உள்ளது. 66 புத்தகங்களும் ஆவியானவரின் உதவியோடு எழுதப்பட்டது. அனைத்தும் முக்கியம் தான்., முதலில்இப்பொழுது நீங்கள் ஆரம்பத்தில் எளிதாக புரிந்துபடிக்க வேண்டிய 20 புத்தகங்களை பார்ப்போம்.

பழைய ஏற்பாடு புத்தகம்:
(ஆதியாகமம்),
ஆதியாகமம் புத்தகத்தில் மனிதன் எவ்வாறு உருவாகினான் என்பதை பற்றியும், தேவன் எவ்வாறு இந்த உலகத்தை படைத்தார் என்பதை பற்றியும் கூறியிருக்கிறது. இந்த உலகம் உருவான கதையை அநேகர் பல விதமாக சொல்லுவார்கள். ஆனால் வேதாகமம் சொல்வதுதான் உண்மை. படைப்புகள் பற்றியும்., மனித வரலாறுகள் பற்றியும்., ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆதியாகமத்தில் படிக்க வேண்டும்.
(யாத்திராகமம்),
யாத்திராகமம் புத்தகத்தில், யோசேப்பு காலத்திற்கு பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமையாகி விடுவார்கள், அதன் பின்பு கர்த்தர் மோசேயை அனுப்பி நிறைய அற்புதங்கள் செய்து ஜனங்களை அடிமையிலிருந்து மீட்டுக்கொண்டுவருவார்., இதைப்பற்றி நாம் யாத்திராகமத்தில் படிக்கலாம். அது மட்டுமல்லாமல் கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகள் நாம் எப்படி, எப்படி வாழவேண்டும் என்ற நியாய பிரமாணங்கள் எல்லாம் அதில் அடங்கி இருக்கிறது.
(யோசுவா),
யோசுவா புத்தகத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து வெளியேறி யோசுவாவின் வழி நடத்துதலின்படி கானான் தேசத்திற்குள் நுழைவார்கள்., யோசுவா அந்த தேசத்தை எல்லா கோத்திரங்களுக்கும் பிரித்து கொடுப்பார். எரிகோ கோட்டை விழுவது, மற்றும் அனேக தடைகளைத் தாண்டி அந்த தேசத்தை பிடிப்பது போன்ற செய்திகளை அதில் படிக்கலாம்.
(நியாயாதிபதிகள்),
நியாயாதிபதிகள் புத்தகத்தில் அதுவரை இஸ்ரவேல் ஜனங்களுக்கு ராஜா என்று ஒருவரும் இருந்தது இல்லை., நியாயாதிபதிகள் மட்டுமே இருந்தார்கள். அதாவது நாட்டாமை, ஊர் தலைவர்கள் போன்ற மாதிரி. ஜனங்களுக்கு எந்த மாதிரி பிரச்சனைகள் என்றாலும் நியாயாதிபதிகளிடம் தான் போவார்கள்., அவர்களைப்பற்றி நாம் அதில் படிக்கலாம்.
{1 சாமுவேல், 2 சாமுவேல், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள்}.
இதில் நியாயாதிபதிகள் காலத்திலிருந்து எப்படி ராஜாக்களின் காலத்திற்கு மாறினார்கள் என்பதை பற்றி இதில் படிக்கலாம்.ராஜாக்களின் வாழ்க்கை வரலாறுகள் பற்றியும்., தாவீது போன்ற அரசர்கள் எப்படி எதிரியின் படைகளை ஜெயித்தார்கள் என்பதை பற்றியும் நாம் அதில் வாசிக்கலாம். வரலாறு புத்தகத்தை படிப்பது போன்று இருக்கும். ஒரு சில ராஜாக்கள் கர்த்தர் பேச்சைக் கேட்டு நடந்திருப்பார்கள்., ஒரு சில பேர் அதை மீறி நடந்திருப்பார்கள் இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை பற்றியும் நாம் வாசிக்கலாம்.
{ரூத்,எஸ்தர், யோனா }
ரூத், எஸ்தர், யோனா, இந்த 3 புத்தகத்தில் ஒரு தனி நபருடைய சரித்திரத்தை பார்க்கலாம். அந்த மூன்று புத்தகமும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
(சங்கீதம்),
சங்கீதம் என்றால் பாடல்கள். அந்த நாட்களில் ஜனங்களுடைய வேண்டுதல்களும், விண்ணப்பங்களும், கர்த்தரை மகிமைப்படுத்துகிற காரியங்களிலும் எல்லாமே பாடல்கள் மூலமாக பாடினார்கள். முக்கியமாக அதிகமான பாடல்களை தாவீது ராஜா பாடியிருக்கிறார். இந்த சங்கீதத்தை தினமும் ஒரு அதிகாரத்தை நீங்கள் படிக்கலாம்.
(நீதிமொழிகள்),
நீதிமொழிகள் என்பது பழமொழி.பழமொழி என்பது ஒரு தனி மனிதன் எவ்வாறு ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பற்றியும் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும்., நீதிமொழிகளில் நாம் படிக்கலாம். எனவே நீங்கள் தினமும் ஒரு அதிகாரம் வாசிப்பது நல்லது.
(பிரசங்கி),
உலகத்தில் நாம் இப்படி வாழ வேண்டும்., அப்படி வாழ வேண்டும் என்று அதிகமாக ஆசைப்படுவோம். இந்தப் பிரசங்கி எழுதினவர் உலகத்தில் அனேக ஞானம் பெற்றிருந்தவர்., அதேபோல் அனேக பணங்களையும் அனேக செல்வங்களையும் ஐஸ்வர்யங்களையும் பெற்றிருந்தவர்., அவர் ஒரு ராஜா எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்துவிட்டு எழுதின புத்தகம் தான் பிரசங்கி., எனவே அதிகமான பொன்னாசை, மண்ணாசை, பொருளாசை, உங்களுக்கு இருந்தால் இந்த புத்தகத்தை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். இதைப் படிக்கப் படிக்க உலகத்திலுள்ள ஆசைகள் எல்லாம் குறைந்து விடும். வாழ்க்கை என்றால் என்ன என்ற நிஜத்தை நாம் இதில் கற்றுக் கொள்ளலாம்.
(தானியேல் அதிகாரம் 1-6).
தானியேல் 1 முதல் 6 வரை இதில் தானியேலை பற்றியும் அவரது நண்பர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ பற்றியும் படிக்கலாம். புத்தகமும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
பழைய ஏற்பாட்டில் நம் பிதாவானவரின் முக்கியத்துவம் குறித்து படிக்கலாம். புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அப்போஸ்தலர்கள் பற்றியும் அதாவது அவர்களுடைய சீசர்களை பற்றியும் பரிசுத்த ஆவியானவரை பற்றியும் படிக்கலாம்.
புதிய ஏற்பாடு புத்தகம்:

(மத்தேயு, மாற்கு, லூக்கா,யோவான்),
இந்த நான்கு புத்தகங்களிலும் இயேசு கிறிஸ்து எப்படி பிறந்தார்., எந்த சந்ததியில் இருந்து வந்தார்., எப்படி வளர்ந்தார்., எப்படி அற்புதங்களைச் செய்தார்., எப்படி மரித்தார்., எப்படி மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்., என்பதைப் பற்றியும் இந்த புத்தகங்களில் வாசிக்கலாம்.
(அப்போஸ்தல நடபடிகள்),
அப்போஸ்தல நடபடிகளில் இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு போன பின்பு சீஷர்கள் எல்லோரும் திகைத்து நின்ற நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கி என்னென்ன அற்புதங்கள் செய்தார் என்றும் எப்படி முதல் சபை தோன்றியது என்பது பற்றியும் வாசிக்கலாம்.
மேலே சொன்ன புத்தகங்கள் மட்டுமல்லாமல் இன்னும் மீதியான புத்தகங்களை எப்படி புரிந்து படிக்கலாம் என்பது பற்றி அடுத்த பகுதியில் (2) படிக்கலாம்.
கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.,
கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடுகூட இருப்பதாக ஆமென்..