கர்த்தர் எப்போதும் நம் வாழ்க்கையில் ஒரு புதிய காரியத்தை செய்ய துவங்கும்போது சாதாரணமாக ஒரு levelல இருந்து இன்னொரு levelக்கு கொண்டு போக மாட்டார். அந்த Process எப்போதுமே ஒரு பெரிய மனஉளைச்சல்,தூங்கா இரவுகள்,எல்லா பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்,பல நேரங்களில் யாருடைய உதவியும் கூட கிடைக்காத சூழ்நிலைகள் கூட உருவாகும் . எல்லாமே முடிந்து விட்டது, இனி ஒன்றுமே இல்லை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு பசுமையே இல்லை இப்படி தான் அதிகமான நேரம் இருக்கும். திடீரென எதிர்பார்க்காத வகையில் வாழ்க்கையில் புது புது பிரச்சனைகள், புது புது எதிரிகள், புது புது அவதூறான வார்த்தைகள, அநேக நினைவுகள், மனித பெலத்தால் ஒரு அடி கூட நகர முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும். பழைய காரியத்திலிருந்து அல்லது பழைய பாதையிலிருந்து அல்லது பழைய வாழ்க்கையிலிருந்து ஒரு புது வாழ்க்கைக்கு செல்லும் போது, நாம் நினைப்போம் புதுமை என்ற உடனே எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நமக்கு அது கிடைக்கும் என்று,அனால் உண்மையில் ஒவ்வொரு முறை ஒரு புதிய காரியம், புதிய வாழ்க்கை, புதிய பாதை நம் வாழ்க்கையில் நடக்கும்போது கிட்டத்தட்ட அது ஒரு பெரிய பிரசவ வேதனைக்கு சமானமாக ஒன்றாகும். பிரசவம் என்பது ஒரு புதிய உயிரை கொண்டு வருவதற்கு சமமாகும்.எல்லாருக்கும் தெரியும் ஒரு புதிய உயிரை கொண்டு வருவதற்கு எவ்வளவு ஒரு கஷ்டமான Process குள்ளாக நாம் போக வேண்டிய சூழ்நிலை என்று. அநேக அழுகைகள், உடல் ரீதியாக, மன ரீதியாக சந்தித்து ஒரு புதிய உயிர் இந்த உலகத்திற்கு வருகிறது. அதற்கு அப்புறம் அவர்களுடைய வாழ்க்கை எல்லாமே முழுவதுமாக மாறுகிறது. இது மட்டும் அல்ல எல்லா விஷயத்திற்கும் ஏதோ ஒரு புதிய காரியத்திற்காக நீங்கள் பல நாட்களாய், பல மாதங்களாய் உபவாசம் இருந்து கண்ணீர் விட்டு அழுது உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு எல்லா ஜெப கூட்டத்திலும் பங்கு பெற்று ஜெபித்து கொண்டிருக்கலாம்.ஆனால் நிலைமை நீங்கள் சுத்தமாக தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்க்கு அப்படியே தலைகீழாக மாறலாம். அதனால் தன் தேவ வார்த்தை சொல்லுகிறது., ஏசாயா 43:19 இதோ, நான் ஒரு புதிய காரியத்தை செய்கிறேன் இப்பொழுதே அது தோன்றும் நீங்கள் அதை அறீர்களா?. நான் வனாந்திரத்திலே வழியையும்., அவாந்திரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். வனாந்திரத்திலே அதாவது ஒரு பாலைவனத்திலே ஒன்றும் இருக்காது. எவ்வளவு தேடினாலும் அதில் ஒரு நம்பிக்கையும் தோன்றாது அத்தகைய ஒரு இடத்திலேயும் ஒரு புதிய காரியத்தை செய்ய தேவனால் முடியும்.திராணிக்கு மேலாக சோதிக்க பட - இதுக்கு மேலக ஒரு சதவீதம் கூட என்னால் சோதனையை சகிக்க முடியாது எல்லாமே முடிந்துவிட்டது. இதற்குமேலும் இந்த சோதனை நீடித்தால் நமக்கு சாவுதான் நிஜத்தில் சாவு இல்லாவிட்டாலும் ஆத்துமாவில் மரணம் தான் என்ற நிலைக்கு வரும் போது ஒரு புதிய ஆரம்பம் / காரியம் நடக்கிறது. இப்பொழுது நாம் மூன்று உதாரணங்களை பார்ப்போம்., 1. ஆதியாகம் 15:16 ஆகார் என்ற அந்த பெண் தன்னுடைய பிள்ளை சாகும் தருவாயில் இருந்ததை பார்த்து, அந்த முடிவை பக்கத்தில் இருந்து பார்க்க அவளுக்கு மனம் இல்லை அதனால் தூரத்தில் உட்கார்ந்து அழுகிறாள்., 2. யாத்திராகமாம் 2:3,4 இதில் மோசேயின் தாய்., மோசேயை மூன்று மாதம் ஒளித்து வைத்திருந்தால்அதற்கு அப்புறம் அவளால் ஒளித்து வைக்க முடியவில்லை.,ஒரு முடிவை பார்த்த அவள் இனி மேல் அவனை ஒளித்து வைக்ககூடாமல் நதி ஓரத்தில் மோசேயை ஒரு கூடையில் வைத்து விட்டு அந்த முடிவை பார்க்க அவளது மனது தாங்காததால் அவள் போய்விட்டாள். அவனுடைய சகோதரி மட்டும் ஒளிந்திருந்து அவனை பார்த்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அந்த அற்புதம் நடந்தது.ஒரு புதிய ஆரம்பம் பார்வோனின் குமாரத்தியின் மூலமாக மோசேக்கும் அவன் தாய்க்கும் கிடைத்தது. 3. ஆதியாகம் 22:10 இந்த இடத்திலும் தேவன் ஈசாக்கை பலியிட ஆபிரகாமிடம் சொன்ன போது அவன் அதை சாராளிடம் சொன்னதாக வாசிக்கவில்லை. ஏன் என்றால் ஆபிரகாமுக்கு தெரியும் அந்த முடிவை சாரளாள் தங்கி கொள்ள முடியாது. ஏன் என்றால் ஆபிரகாமுக்கு தெரியும் அந்த முடிவை சாராளாள் தங்கி கொள்ள முடியாது என்று ஆபிரகாம் மட்டும் பலியிட செல்கிறார். எல்லாமே முடிந்து விட்டது என்று அவன் கத்தியை நீட்டிய போது அந்த கடைசி நொடியில் தேவன் ஒரு தூதனை அனுப்பி ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் ஒரு புதிய ஆரம்பத்தை கொடுத்தார்/ வாழ்க்கையை கொடுத்தார். இந்த நேரத்தில் அதிகளவு மனதிலும் உடலளவிலும் ஆவியிலும் கூட ஒரு தொய்வு ஏற்படலாம். ஆனாலும் சோர்த்து போகாமல் எந்த ஒரு முடிவிலும் தேவனால் ஒரு புதிய ஆரம்பத்தை தரமுடியும் என்று விசுவாசத்தோடு இருக்கும் போது ஒரு வேளை விசுவாசமே ஒரு சதவீதம் கூட இல்லாவிட்டாலும் எல்லாமே முடிந்து விட்டது என்ற கடைசி கட்டத்திற்கு வந்தாலுங்கூட தேவனை தூஷிக்கவோ மறுதலிக்கவோ தேவனை கேள்விகேட்கவோ இவ்வளவு நாள் கிறிஸ்தவனாய் / கிறிஸ்தவளாய் வாழ்ந்தது, ஜெபித்தது, ஆராதனைக்கு போனது எல்லாமே waste என்று சலிப்பான வார்த்தைகள் பேசாமல் இஸ்ரவேல் ஜனங்களை போல முறுமுறுக்காமல் இருந்தால் தேவன் நீங்கள் முடிந்துவிட்டது என்று நினைக்கின்ற காரியத்தில் ஒரு புதிய ஆரம்பத்தை / ஒரு புதுமையை தருவார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!
