
நாம் ஏற்கனவே பார்த்தோம் கடந்த மாதத்தில் தேவனுடைய கிரியைகள் நம் வாழ்வில் வெளிப்பட போகிறதென்று., குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2:3.,
நிச்சயமாக அவர் நம் வாழ்வில் கிரியை செய்ய போகிறார். அதற்கு முன்பாக ஒரு வேலை பிசாசு உங்கள் வாழ்வில் ஒரு மரண பள்ளத்தாக்கை கொண்டு வரலாம்., மரண பயத்தை கொண்டு வரலாம்., ஆத்துமாவிலும் ஆவியிலும் அவருடைய கிரியைக்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் மரித்த நிலவரத்தில் நீங்கள் இருக்கலாம். இன்று விசுவாசத்தோடு அறிக்கை பண்ணுங்கள்,நான் சாகாமல் பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன் என்று., இந்த மரண சூழ்நிலைகள், ஏமாற்றத்தின் உச்சம், பயத்தின் உச்சம், நம் வாழ்வில் வரும்போது பிசாசானவன் முதலில் அவர் நம் வாழ்வில் இவ்ளோ நாள் செய்த செய்கைகள், அதாவது அற்புதங்கள் அடையாளங்களை மறக்கடிக்க செய்கிறான்., அதை நம் வாயினால் அறிக்கை செய்ய விடாதபடிக்கு முறுமுறுப்பையும் எதிர்மறையான வார்த்தைகளையும் சுய பரிதாப பேச்சுகளையும் ஒரு சில நேரங்களில்

யோபுவின் மனைவியை போல அவரை தூஷிக்கும்படியான வார்த்தைகளையும், இஸ்ரவேல் ஜனங்களை போல அதிகப்படியான சலிப்பான வார்த்தைகளை பேசவும் செய்கிறான். உண்மையில் தேவன் நம்மை முழுவதுமாக கைவிட்டு எங்கோ போய் மறைந்து விடவில்லை. கிதியோனின் வாழ்க்கையில் தேவன் அதை நிரூபித்தார். உன் வாழ்க்கையில் என் கிரியைகள் வெளிப்பட அதிகப்படியான மனுஷீக பெலன் தேவை இல்லை. அதிகப்படியான ஆயுதங்கள் தேவை இல்லை.
நியாயாதிபதிகள் (7:2-7)
2அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.
3ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம்பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.
4 கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரீட்சித்துக்காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார்.
5அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணினான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும்பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக்குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்.

6தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
7அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.
மரணத்திற்கு பயந்து போய் ஒளிந்து கொண்டு வாழ்ந்து வந்த மனிதன் அவன். அந்த மனிதனைக் கொண்டு அவருடைய செய்கைகளை விவரிக்க வைத்தார். கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று மிக தைரியமாக விவரிக்க ஆரம்பித்தார்கள்.

நியாயாதிபதிகள் (7:20-22)
20மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
21பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.
22முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்;
கர்த்தர் மிகவும் அதிசயமாய் அவர்களை மரணத்தில் இருந்து விடுதலை ஆக்கினார். நீ பிழைப்பாய் என்று இந்த தருணத்தில் கர்த்தர் சொல்கிறார். கர்த்தாவே இந்த சூழ்நிலை மாறி நான் பிழைப்பேனா என்று நீங்கள் கேள்வி கேட்டு கொண்டிருக்கலாம்..
குஷ்டரோகியான நாகமானுக்கும் இதே கேள்விகள் இருந்தது. அந்நிய தேசத்தானாகிய அவன் வாழ்வில் தேவனுடைய கிரியைகள் வெளிப்பட்டது. இஸ்ரவேலின் தேவனே மெய்யான தேவன் என்று அவன் தன் வாயினால் அவருடைய செய்கைகளை விவரித்தான்…
9அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.

10அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
11அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.

12நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.
13அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.

15அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்;
அந்நிய தேசத்தானாகிய அவன் வாயில் இருந்து அவருடைய செய்கைகள் விவரிக்கப்பட்டது. இன்றைக்கு நாமும் அவருடைய நாமத்துக்காக பிழைத்திருந்து அவருடைய செய்கைகளை, கிரியைகளை நம் வாயினால் அநேகருக்கு முன்பாக விவரிக்க வேண்டுமென்றே ஆசை படுகிறார். எனவே,விசுவாசத்தோடு நம் வாயினால் அறிக்கை பண்ணுவோம். கர்த்தாவே, நானும் என் குடும்பமும் சாகாமல் பிழைத்திருந்து உம்முடைய செய்கைகளை விவரிப்போம் என்று., கர்த்தர் நம் வாழ்வில் பெரிய காரியங்களை செய்வர். ஒரு வேளை நீங்கள் கிதியோனை போல நினைத்து கொண்டிருக்கலாம்.அநேக மனித உதவிகள், பழக்க வழக்கங்கள் நமக்கு ஒரு வெற்றியை, நிறைய உதவிகளை கொண்டு வரும் என்று.,ஆனால், தேவன் அந்த கதவுகளை எல்லாம் அடைப்பார். ஏனெனில்,நம்மை சுற்றி உள்ளவர்கள் கடைசியில் அந்த மகிமையை எடுத்து கொள்ளக்கூடாது.நாமும் கடைசியில் மனிதர்கள் தான் எனக்கு உதவினார்கள் என்று தேவனை விட பெரிய இடத்தில எந்த ஒரு மனிதர்களையும் வைத்து விட கூடாது என்பதற்காக அவரே சில நேரம் நமக்கு முன்பாக இருக்கிற அநேக வாசல்களை அடைப்பார். 300 பேரை கொண்டு இஸ்ரவேலை ரட்சித்தார்.இந்த காலகட்டத்தில் கர்த்தர் முழுவதுமாக அவருடைய கிரியைகள் நம் வாழ்வில் வெளிப்பட விரும்புகிறார். அதற்கு நாமும் கிதியோனை போல இடம் கொடுக்க வேண்டும். கொஞ்சம் மனிதர்கள் போதும் என்று கிதியோனிடம் சொன்னார்.அதே போல் இன்று
