தேவனுடைய கிரியை உன் சத்துருக்களின் வாழ்வில் வெளிப்படப்போகிறது!

நேற்றைய தினம் பார்த்தோம் தேவனுடைய கிரியை நம்முடைய வாழ்க்கையில் எப்படி வெளிப்படப்போகிறது என்று அதே போல் இன்றைய தினம் தேவனுடைய கிரியை நம் சத்துருக்களின் வாழ்வில் எப்படி வெளிப்படப்போகிறது என்பதை பார்ப்போம்.

தேவன் நம்முடைய வாழ்கையில் விடுதலையை கொடுக்க வரும்போது அல்லது நம்முடைய சிறையிருப்பை மற்றும் போது அநேக நேரத்தில்

பிசாசுக்கு அது பிடிப்பதில்லை, எனவே பிசாசு நம் விடுதலையின் இறுதி கட்டத்திற்கு வரும் போது அது நம்மிடத்தில் அதிகமாய் போராடும். ஏனென்றால் நாம் அடிமை பட்டு சிறையிருப்பில் இருந்தால் தான் அதற்கு அதிக லாபம் கிடைக்கும் அடுத்தபடியாக நாம் சந்தோஷமாக இருப்பது அதற்கு பிடிக்காது. ஒரு உதாரணமாக மோசே முதல் முறையாக பார்வோனிடத்தில் போய் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பது பற்றி பேசியபோது பார்வோனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த மனிதர் மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்: வீண் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.(யாத்திராகமம் 5:9)

எனவே இன்னும் அதிகமாக அவர்களை கொடுமை படுத்த ஆரம்பித்தான்.

ஆனால் உண்மையாக அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் விடுதலையின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டனர். இதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கும் நாம் விடுதலைக்காக அதிகமாக ஜெபிக்கும் நேரத்தில் இன்னும் அதிகமான கொடுமைகளை அனுபவிப்பது போல உணர்வோம். அநேக ஜனங்கள் உங்களிடம் இந்த ஆண்டவரிடத்தில் நீ போனதால் உனக்கு பாரு இந்த நிலைமை என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்,.

அவர்கள் பார்வோனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டுஅவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர் என்றார்கள்.(யாத்திராகமம் 5:20,21)

இதேபோல நம்முடைய வாழ்க்கையிலும் அநேக நேரம் சோர்வுகளும் வரும், இதற்கு நாம் விடுதலைக்காக ஜெபிக்காமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணங்கள் வரும், சில நேரம் நம்மை நடத்துகின்ற ஊழியர்கள் மேல் கோபம் கூட வரும். இந்த ஊழியரிடம் போய் ஜெபித்து இன்னும் அதிகமாக என்னுடைய பிரச்சனை அதிகமாக மாறிவிட்டது என்று கூட சிலபேர் சொல்லி நான் கேள்விப்பட்டுயிருக்கிறேன் இல்லாவிட்டால், நான் என்றைக்கு அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தேனே, ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற ஆரம்பித்தேனோ, அல்லது என்றைக்கு ஞானஸ்தானம் எடுத்தேனோ, அதிலிருந்துதான் என்னுடைய வாழ்கை மிகவும் மோசமாக ஆரம்பித்துவிட்டது, என்று கூட சில பேர் சொல்லுவார்கள்.

இந்த வசனத்தில் படி பார்த்தால்., அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப் பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான். (யாத்திராகமம் 5:22,23).

ஒருவேளை நீங்கள் ஊழியக்காரராக இருந்தால் அல்லது பிறருக்காக ஜெபிக்கின்ற ஜெப வீரனாக இருந்தால் இந்த இடத்தில மோசேயை போல சோர்வுகள் வரும். உங்க சித்தத்தின்படி தான் நான் போய் ஜெபித்தேன். ஆனால் என் ஜெபம் கேட்கப்படவில்லையே மாறாக அவர்களுக்கு இன்னும் அதிகப்படியான பிரச்சனைகள் வந்துவிட்டதே என்று ஆண்டவரிடத்தில் கேள்விகள்கூட கேட்க ஆரம்பிப்போம். அடுத்த முறை பிறருக்காக ஜெபிக்கும் போது ஒரு தயக்கம் கூட நமக்கு வரலாம். ஒருவேளை நான் ஜெபித்து நடக்கமால் போய்விடுமோ என்று பயம் கூட வரலாம். ஆனால் அது உண்மையில்லை இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் விடுதலையின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டார்கள் என்பது மட்டுமே உண்மை. அதேபோல் உண்மையாய் ஊழியம் செய்கின்ற மோசே போன்ற ஊழியர்களையும் தேவன் இன்னும் கொஞ்ச நாட்களுக்குள்ளாக எகிப்தியர்களின் முன்பாகவும் இஸ்ரவேலின் ஜனங்களின் முன்பாகவும் மகிமை படுத்தப்போகின்றார் என்பது மட்டுமே உண்மை.

எகிப்தி என்பது உலகத்தை குறிக்கிறது., உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள். (யாத்திராகமம் 6:7).

ஒருவேளை பிசாசு விரித்த கண்ணிகளுக்குள் நாம் ஒரு காலம் விழுந்திருக்கலாம்.

ஒரு உதாரணமாக உங்களுக்கு கடன் என்பது ஒரு பெரிய சுமையாக இருந்தால் இந்த கடன் என்கிற எகிப்தி சுமையை நீக்கி உன்னை விடுவிக்கிற உன் தேவனாகிய கர்த்தர் என்று நீ அறிவாய் என்று நம்மை பார்த்து சொல்கிறார். இதேபோல் நீங்கள் எந்த சுமையை சுமந்து கொண்டிருந்தாலும் கர்த்தர் அந்த சுமைகளை நீக்கி நம்மை விடுதலை ஆக்க போகின்றார் நம்மை விடுதலை ஆக்குறது மட்டுமில்லாமல் இவ்வளவு நாள் நம்மை அடிமைப்படுத்தின அந்த எகிப்தையும் அதாவது அந்த பிசாசையும் முழுமையாக அழிக்க போகின்றார். தேவன் எவ்வளவோ வாதைகளையும், பிரச்சனைகளையும் கொடுத்துப்பார்த்தார் உன்னை அடிமைப்படுத்தின பிசாசுகளுக்கும், மனிதர்களுக்கும். இன்னும் ஒரு மாற்றம் ஏற்படாததால் தேவனே இந்த முறை இறங்கி வந்து உனக்காக யுத்தம் பண்ண போகின்றார், நாம் சும்மா இருக்க போகின்றோம்.

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான் (யாத்திராகமம்14:13,14).

இந்த இடத்தில் மோசேக்கு தேவன் ஒரு கட்டளையை கொடுக்கின்றார்., அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்..(யாத்திராகமம்14:15,16).

இந்த இடத்தில் தேவன் நம்மிடம் என்ன சொல்ல வருகின்றார் என்றால்., இன்னும் நீ ஏன் என்னிடம் வந்து அழுது கொண்டு, புலம்பி கொண்டு,முறையிட்டு கொண்டிருக்கிறாய்.,நான் உனக்கு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் எனக்கு முன்பாக இருக்கின்ற சமுத்திரமே., அதாவது நம்முடைய கடன்,வறுமை,வியாதி,திருமணத்தடை, குடும்ப வாழ்க்கையில் ஒரு முன்னேற்றமில்லாமை, இதுபோன்ற எந்த மிகப்பெரிய சமுத்திரம் நமக்கு முன்பாக இருந்தாலும் அதை பார்த்து நாம் கட்டளையிட்டு ஜெபி(யி)க்கும்படியாக தேவன் ஆலோசனை தருகிறார்., இதன் மூலமாக “தேவன் நம்முடைய விசுவாசத்தை பார்க்க விரும்புகிறார்”.

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று (யாத்திராகமம் 14:21).

நாம் விசுவாசத்தோடு ஒரு அடியை எடுத்து வைக்கும் போது ,கர்த்தர் நம்மோடு கூட இருந்து யுத்தம் செய்கின்றார்.மோசே விசுவாசத்தோடு தன் கையை நீட்டும்போது ,கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்து பெரிய இரட்சிப்பை கட்டளையிடுகிறார் .அதுமட்டுமல்லாமல் பார்வோனையும் அவன் முழு சேனையையும் ஒருவர் கூட விடாமல் முழுவதுமாக சங்கரிக்கிறார் .

இப்படியாக தேவன் நம்மை விடுதலை ஆக்குவதுமட்டுமல்லாமல் இவ்ளோ நாள் நம்மை கொடுமைப்படுத்திய அனைத்து சத்துருக்களையும் முழுவதுமாக நம் வாழ்வை விட்டே நீக்க போகிறார். இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.

கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.(யாத்திராகமம் 14:30,31).

கர்த்தருடைய மிக பெரிதான கிரியை அன்றைக்கு அவர்கள் சத்ருக்களின் வாழ்க்கையில் நடந்ததை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டார்கள் .இதே போல் இன்றைக்கும் நம்மை விடாமல் பின் துரத்தி வரும் சத்துருக்களை ,பிரச்சனைகளை தேவன் முழுவதுமாக நம் வாழ்க்கையை விட்டு நீக்க போகிறார் .இந்த இஸ்ரவேல் ஜனங்கள் அடிமையாய் இருந்தது எதோ பத்து பதினைந்து வருடம் இல்லை .கிட்டத்தட்ட 400 வருடங்கள் ,பல தலைமுறையாக அடிமை பட்டு கிடந்தார்கள்.அப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்தே தேவன் அவர்களை விடுதலையாக்கி அவருடைய மகத்தான கிரியையை அன்றைக்கு காண்பித்தார் .ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை (யாத்திராகமம் 14:28). அதாவது ஒருவர் கூட தப்ப வில்லை, இன்றைக்கும் உங்களை பின்தொடர்ந்து ஒன்று இரண்டு பிரச்சனை அல்ல ,பல பிரச்சனைகள் தொடர்ந்து வரலாம் .உன் சுமையை நீக்கி விடுதலையாக்குவேன் என்று சொன்ன தேவன் அனைத்து சுமைகளையும் ,அனைத்து பிசாசுகளையும் ,அனைத்து பிரச்னைகளையும் ,ஒரே நேரத்தில் நம்மை விட்டு நீக்க போகிறார் .இது தான் தேவனுடைய மகத்தான கிரியை. கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து,

கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள். (யாத்திராகமம் 14:31) .இப்படி செய்வதின் மூலமாக மறுபடியும் நாம் தேவன் மேலேயும் ,நம்மை நடத்துகிற ஊழியர் மேலேயும் நமக்கு ஒரு நம்பிக்கை,விசுவாசம் வரும்படியாக செய்ய போகிறார் .ஊழியம் செய்கிற அல்லது பிறருக்காக ஜெபிக்கிற உங்களையும் தேவன் எல்லார்முன்பாகவும் கனப்படுத்தி ,இனி வரும் நாட்களில் ஜனங்கள் உங்கள்மேல் விசுவாசம் வைக்கும்படியாக செய்ய போகிறார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

1 thought on “தேவனுடைய கிரியை உன் சத்துருக்களின் வாழ்வில் வெளிப்படப்போகிறது!

Leave a Reply

Your email address will not be published.