நம்முடைய நிகழ்காலத்தை மனதில் வைத்து எதிர்காலத்தை நாமே சித்தரிப்பது. நம்முடைய எதிர்காலத்தை நாமே தவறான முறையில் கற்பனை பண்ணி பார்ப்பது தான்,நம்முடைய பல நாட்கள் தூக்கத்தை கெடுக்கிறது.

மத்தேயு 6:34ல் ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
ஆண்டவர் நாளைக்கே கவலைப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார்.
ஆனால்,அநேக நேரம் நாம் இப்போ இருந்து பல வருடங்களுக்கு சேர்த்து வைத்து கவலைப்படுவோம்.எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு நிகழ்காலத்தில் உள்ள சந்தோஷத்தை இழந்துவிடுவோம்.அதனால் பயம் நம்மை விட்டு போகவேண்டுமென்றால்,முதலாவது நம்முடைய எதிர்காலத்தை தவறான முறையில் கற்பனை சேய்து பார்க்க கூடாது.கர்த்தருக்கு நம்முடைய முழு கதையும் தெரியும்.அவர் நம்மை முழுவதும் நடத்துவார்.
எனக்கு சின்ன வயசுல இருந்து பயம் அதிகளவு வரும்.இதுனால அநேக நாள் என்னுடைய தூக்கத்தை நான் இழந்திருக்கிறேன்.ஒரு சில நாட்கள் நான் நினைத்து பார்ப்பேன்.,எதுக்கு இந்த விஷயத்துக்காக இரண்டு மூன்று வருஷத்துக்கு முன்னாடி விடிய விடிய சரியா தூங்காம முழிச்சிருந்தோம்னு.இப்போ அந்த விஷயம் ரொம்ப Simple ஆ,ரொம்ப இலகுவா ஆண்டவர் செய்து முடித்தாரேன்னு.
நிறைய நேரம் நமக்கு எப்படி பயம் வருகிறதென்றால், நாம் இப்போ உள்ள நிகழ்கால பிரச்சனைகள் விட அடுத்த 3ஆண்டுகள்,5 ஆண்டுகள்,10 வருஷத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்னு, நம்ம மனசுல கற்பனை பண்றது தான் காரணம்.
இதற்கெல்லாம் ஒரு தீர்வு என்னவென்றால்,நமக்கு ஆவிக்குரிய கண்கள் வேண்டும்.அநேக நேரத்துல மாம்சீக

கண்களால் நாம் சூழ்நிலைகளை பார்க்கிறோம்.ஆவியின் கண்களால் சூழ்நிலைகளை பார்க்க வேண்டும்.உண்மையில் ஒரு பெரிய ஆபத்தில் இருந்தாலும்,மாம்சீக கண்களால்,எல்லா மனிதர்களும் பார்ப்பது போல் நாமும் பார்த்தால் நிச்சயமாக பயமும் கூச்சலும் மரண பயமும் தான் வரும்.
2 இராஜாக்கள் 6 ம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்.
நாம் உண்மையாகவே தேவனுடைய பிள்ளைகளாக,அவரோடு தினமும் ஒரு நல்ல உறவு வைத்திருக்கிறவர்களாக இருந்தால்,கர்த்தர் நமக்கு பல அடுக்கு பாதுகாப்பு தருகிறார்.இந்த பல அடுக்கு பாதுகாப்பை நிஜ கண்களால் நாம் பார்க்கமுடியாவிட்டாலுங்கூட,
அன்றைக்கு எலிசா அவருடைய வேலைக்காரனிடம் சொன்னது போல,

” அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்-
2 இராஜாக்கள் 6:16″
கர்த்தர் நம்மை பாதுகாக்க தேவதூதர்களை தந்திருக்கிறார்.நம்மை வழிநடத்த பரிசுத்தாவியானவரை தந்திருக்கிறார்.”நீர் எனக்கு தந்த பாதுகாப்பை நாம் காண என் ஆவிக்குரிய கண்களை திறந்தருளும்ஆண்டவரே” என்று ஜெபிக்க வேண்டும்.
நம் ஆவிக்குரிய கண்களால் நம் சூழ்நிலைகளை பார்க்க ஆரம்பிக்கும்போது,பிரச்சனைகளே வந்தாலும், ஒரு பெரிய Army support எனக்கு இருக்கு,தேவன் அந்த அளவுக்கு எனக்கு பாதுகாப்பை தந்திருக்கிறார் என்று வெளிப்படும்.மனிதர்கள் நம்மை தாக்க வந்தாலுங்கூட,கர்த்தர் நமக்கு தந்த பாதுகாப்பை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
