கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.(எரேமியா 20:11)
But the Lord is with me as a dread warrior;
Therefore my persecutors will stumble;
they will not overcome me.
They will be greatly shamed,
for they will not succeed.
Their eternal dishonor
will never be forgotten.
(Jeremiah 20:11)

நாம் அனேக நேரங்களில் நம்மை துன்பப்படுகிறவர்களின் பெலத்தை மட்டுமே பார்க்கிறோம். நம் அருகே நிற்கிற கர்த்தரின் பெலத்தை மறந்து போகிறோம். என்றைக்கு நம் பிரச்சனையை விட நம் தேவனை பெரியவராய் பார்க்க ஆரம்பிக்கிறோமோ, அன்றைக்கு தான் நாம் பிசாசை வெட்கப்படுத்த முடியும். இல்லாவிட்டால் பிசாசு தான் நம்மை தொடர்ந்து தன்னுடைய வார்த்தையாலும் செய்கையாலும் வெட்கப்படுத்திக் கொண்டே இருப்பான். நம்முடைய தேவன் பயங்கரமான பராக்கிரமசாலியாக நம்மோடு இருக்கிறார். ஒரு பராக்கிரமசாலி சாதாரணமாக யாரைக் கண்டும் பயப்பட மாட்டார். எப்போதும் யுத்தம் செய்து வெற்றி பெற தயாராக இருப்பார். நம்முடைய தேவன் நம் அருகே நின்று நம் சத்துருக்களோடு யுத்தம் செய்ய ஆயத்தமாய் இருப்பதால் நம் சத்துருக்கள் ஒருநாளும் நம்மை மேற்கொள்ள முடியாது. கர்த்தர் நம் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவார். நம்மை அசிங்கப்படுத்தி, வெட்கப்படுத்தி, தலை குனிய நினைப்பவர்களை தலைகுனிய பண்ணுவார்.
ஜெபம்:
கர்த்தாவே, என் சத்துருக்கள் எனக்கு விரோதமாக வரும்போது நீரே என் அடைக்கலமும் என் கேடகமும் என் தஞ்சமுமாயிருக்கிறீர். பயங்கரமான பராக்கிரமசாலியாய் நீர் என்னோடு இருப்பதால் எனக்கு எந்த பயமும் இல்லை. நீரே எனக்கு துணையாக வாரும். என் யுத்தங்களை நீரே நடத்துவீராக. என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணும். நான் உமக்காக வாழ எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென். ஆமென்.
Praise the lord