இச்சையிலிருந்து விடுதலையாவது எப்படி?

இச்சை என்பது நம்முடையதல்லாத ஒன்றை நாம் எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைப்பது. வேதத்தில் இதை தேவன் ஒரு கட்டளையாகவே சொல்லியிருக்கிறார். யாத்திராகமம் 20: 17 இல் பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

அதாவது அவர்களுடைய ஆசீர்வாதங்களை பார்த்து இது நமக்கு இல்லையே,இதை நாம் எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைக்கிற எல்லாமே இச்சைதான். இப்பொழுது நாம் முக்கியமாக மாம்சத்தில் நமக்கு வருகிற இச்சையை பற்றி பார்க்க போகிறோம். எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். ஒரு ஆண் ஒரு பெண் மேலே ஒரு தவறான ஒரு விருப்பமோ, அல்லது ஒரு பெண் ஒரு ஆண் மேலே ஒரு தவறான விருப்பமோ, அல்லது ஒரு ஆண் நிறைய பெண்கள் மீது தவறான விருப்பமோ, ஒரு பெண் நிறைய ஆண்கள் மீது தவறான விருப்பமோ, இப்படிப்பட்ட எல்லாமே இந்த இச்சையின் பாவத்திற்கு கீழ் தான் வரும்.

இன்றைக்கு நம்முடைய உலகத்தின் சட்டங்கள் கூட இந்த IlLegal ஆன விஷயங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். சட்டத்தில் வந்து இது தவறு இல்லை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இதனால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. கொலை,கொள்ளை, அநேகருடைய திருமண வாழ்க்கை உடைந்து போகிறது, நிறைய பிள்ளைகள் அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள்.இதுபோன்ற செய்திகளை நாம் அநேக செய்திகளில் பார்க்கிறோம். இந்த செய்தி இல்லாத ஒருநாள் இருக்கவே இருக்காது. இது எல்லாவற்றுக்கும் இச்சை என்ற அந்த ஒரு பாவம் தான் காரணம். இச்சை வந்து மற்ற எல்லா பாவங்களை விட எந்த அளவுக்கு கொடூரமான வேலை செய்கிறது என்று பார்த்தோமானால், ஒரு அழகான குடும்பமாக இருக்கிறார்கள் கணவன் மனைவி பிள்ளைகள் என்று. திடீரென்று மனைவிக்குள்ளே ஒரு இச்சை வருகிறது. வேறு ஒரு நபருடன் அவர்களுக்கு தொடர்பு வருகிறது. இதை கணவர் வந்து பார்த்துவிட்டு கண்டிப்பாக யாராலயும் சும்மா இருக்க முடியாது. அந்த நேரத்தில் அந்த மனைவியை கொன்று விடுகிறார். கொன்ற காரணத்திற்காக இவர் ஜெயிலுக்குப் போகிறார். கடைசியில் அந்த பிள்ளைகள் அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள். இல்லாவிட்டால் கணவருக்குள் திடீரென்று இச்சை வருகிறது. அப்போது அந்த மனைவி என்ன செய்கிறார்கள் என்றால் அந்த கணவனை கொலை செய்கிறாள். இல்லாவிட்டால் சில நேரங்களில்

இருவரும் சேர்ந்து பிள்ளைகளை கொலை செய்கிறார்கள் செய்துவிட்டு அவர்கள் இருவரும் தற்கொலை செய்து விடுகிறார்கள். இது போல ஒரு அழகான குடும்பமாக இருந்தாலும் ஒரே நிமிஷத்தில் இந்த இச்சையின் பாவத்தின் நிமித்தமாக உடைந்து போகிறது. இது எல்லோருமே பார்க்கிற ஒரு விஷயம்தான். எனவே இந்த இச்சை வந்து நம்முடைய வாழ்க்கையில் வரவே கூடாது. கண்டிப்பா இது நம்மோடு போராட தான் செய்யும். ஆனால் இதிலிருந்து நாம் எப்படி வெளியே வரவேண்டும் என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் நாம் இந்த பாவத்தில் இருந்து விடுதலையாக முடியும். நீதிமொழிகளில் கூட ஒரு வசனம் உள்ளது. அவள் தன் கண்ணிமைகளினால்

உன்னை பிடிக்க விடாதே. அவள் என்பதை நாம் அவன் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அவர்கள் கண்ணிமைகளினால் நம்மை பிடிக்க நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது என்று ஆண்டவர் சொல்கிறார். இச்சையின் பாவத்திற்கு அதிகப்படியான முக்கியமான பங்கு வகிப்பது நம்முடைய கண். எப்பேர்பட்ட மனிதராக இருந்தாலும் மற்றவர் இச்சையோடு தன்னைப் பார்க்கும் போது அவர்களுடைய வலையில் இவர்கள் விழுகிறார்கள். இதை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். முக்கியமாக வாலிப பிள்ளைகளாகிய நாம் இதை ரொம்ப சாதாரணமாக நினைக்கிறோம். என்னை ஒரு ஈர்ப்பினால் அவர்கள் பார்க்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அதற்குப் பின்பாக ஒரு பெரிய சாத்தானுடைய கூட்டமே இருக்கிறது. அதன் பின்பாக ஒரு ஆவிக்குரிய விஷயமும் இருக்கிறது. அநேக நேரங்களில் அந்த மனிதர்களின் கண்கள் மூலமாக நாம் பிசாசுடைய வலையில் சிக்க வைக்க வேண்டும் என்பது சாத்தானுடைய குறிக்கோளாய் இருக்கிறது. யோபு கூட யோபு 31:1 ல் சொல்கிறார் என் கண்களோடு உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின் மேல் நினைவாய் இருப்பது எப்படி? யோபு தன் கண்களோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்கிறார்.நாம் பார்க்கிற எல்லாமே நமக்குரியது கிடையாது என்று. நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவருக்குக்கென்றே ஒரு உடன்படிக்கை பண்ணி வைத்துள்ளார். கண்டிப்பாக நாமும் நம்முடைய கண்களோடு ஒரு உடன்படிக்கை பண்ணவேண்டும். உதாரணமாக வன்கண்கள், அவர்கள் கண் வைத்து விட்டால் நம்முடைய ஆசீர்வாதங்கள் போய்விடும் என்று நாம் சொல்லுவோம். அதேபோல இச்சையின் கண்களும் உள்ளது. ஒரு சிலர் நம்மை பார்த்து விட்டாலே நாம் அந்த இச்சையின் பாவத்தில் விழுந்துவிடுவோம். எனவே நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தால் தான் அந்தப் பாவ வலைக்குள் நாம் விழாமல் இருக்க முடியும். இச்சையின் பாவத்திலிருந்து நாம் எப்படி எல்லாம் வெளியே வரலாம், வெளியே வர எப்படி எல்லாம் ஜெபிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

முதலாவது பரிசுத்த ஆவியானவரிடம் ஜெபிக்க வேண்டும்.ஆவியானவரே என்னுடைய கண்களில் உம்டைய பரிசுத்த அக்கினியை ஊற்றும். அப்படி நாம்

ஜெபிக்கும்போது நம்முடைய கண்களில் அக்கினி இருக்கும். ஒருவேளை யாராவது வசியம் வைத்தால்,யாராவது இந்த பெண்ணை ஈர்க்க வேண்டும், இந்தப் பையனை ஈர்க்க வேண்டும் என்று இது போல இப்போது நிறைய பேர் பண்ணுகிறார்கள். எல்லாருக்குமே இது தெரியும். எல்லோருமே இதைக் கேள்விப்பட்டு இருப்போம்.அதுபோல அவர்கள் பண்ணிட்டு வரும்போது நமக்குள் பரிசுத்த ஆவியானவரின் அக்கினி அவருடைய வல்லமை நம்முடைய கண்களில் இருக்கும் போது அவர்கள் கண்கள் முன்பாக நாம் மறைக்கப்படுவோம். அப்போது நாம் எளிதாக அவர்கள் வலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அடுத்தபடியாக இந்த இச்சையடக்கம் நம்முடைய வாழ்க்கையில் வேண்டுமென்றால் நாம் பொறுமையாக இருக்க பழக வேண்டும். உதாரணத்துக்கு நாம் விரும்புவது ஆசைப்படுவது எல்லாம் சரிதான். ஆனால் ஒரு பொறுமையே இல்லாமல், யாரோ ஒருவர் ஒரு நல்ல வீடு கட்டிவிட்டார்கள் என்றால் உடனே நானும் இப்போதே அதே போல வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. நிச்சயம் கர்த்தர் ஏற்ற காலத்தில் ஒரு வீட்டை தருவார். ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றால் எனக்கும் அதே போலவே உடனே திருமணம் ஆக வேண்டும் என்று நினைத்து அவசர அவசரமாக யாரையாவது பார்த்து திருமணம் செய்து, கடைசியில் அதுவே வந்து பிற்காலத்தில் பெரிய பிரச்சினையாகிவிடும்.கண்டிப்பாக கர்த்தர் நமக்கும் ஒரு துணையை வைத்திருப்பார்.கண்டிப்பாக பரிசுத்த ஆவியானவர் நாம் ஜெபிக்கும்போது ஒரு துணையை நமக்காக தருவார். ஒரு ஆசீர்வாதம் பிறருக்கு வரும் போது உடனே எனக்கும் அந்த ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்கக்கூடாது இச்சைடக்கத்திற்கு முக்கியமாக பொறுமையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவரே எனக்கு பொறுமையை தாருங்கள் நான் இச்சை அடக்கமாக இருக்கவேண்டும் என்று ஜெபிக்கும்போது ஏற்ற வேளையில் கர்த்தர் நமக்கு இல்லாத ஆசீர்வாதத்தை தருவார்.

II பேதுரு 4. இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

5. இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

6. ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,

7. தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.

இப்போது சிறு பிள்ளைகள் கூட இது போன்ற விஷயத்தில் மிக எளிதாக விழுந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் எந்த விஷயத்திலும் பொறுமையே கிடையாது. இதற்கு முன்பாக நாம் பார்த்தது இச்சை என்பது நம்மைத் தேடி வரும். அடுத்தபடியாக நாம் பார்ப்பது என்னவென்றால் நாமே போய் அந்த இச்சைக்குள் விழுவது. நாம் ஒரு ரோட்டில் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். எதிர் முனையில் வேறொருவர் வருகிறார்கள். இப்போது நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் எதிர்முனையில் ஒரு ஆண் வருகிறார்கள். முதல் முறையாக நாம் இருவரும் சந்திப்பதில் ஒரு தப்பும் இல்லை. ஏனென்றால் ரோட்டில் நாம் போகும் போது கண்ணை மூடிக் கொண்டே போக முடியாது. எப்போதுமே கீழே குனிந்து பார்த்துக் கொண்டும் போக முடியாது.கண்டிப்பாக நாம் பல பேரை பார்க்க தான் செய்வோம். அதே சமயம் நாம் இரண்டாவது முறையாக திரும்ப அவர்களைப் பார்க்கிறோம் என்றால் அவர்களும் அந்த நேரத்தில் நம்மைத் திரும்பிப் பார்க்கிறார்கள் என்றால் நம்முடைய இரண்டு கண்களும் சந்திக்கும் போது கண்டிப்பாக இந்த நேரத்தில் அநேகர் வந்து இச்சையின் பாவத்தில் விழுகிறார்கள். முதல் முறை நாம் பார்க்கும் போது ஒரு இச்சை நமக்குள் வருகிறது என்றால் அந்த உணர்வு நமக்கே தெரிகிறது என்றால் உடனே இயேசுவின் நாமத்தினால் போ சாத்தானே என்று அந்த இச்சையின் ஆவியை உடனே கடிந்து கொள்ள வேண்டும்.

எபேசியர் 5: 11 இல் சொல்லப்படுகிறது. கனியற்ற அந்தகார கிரியைக்கு உடன்படாமல் அதைக் கடிந்து கொள்ளுங்கள். உடனே நாம் கடிந்துகொள்ளும் போது அது நம்மை விட்டு விலகிவிடும். தாவீதுடைய வாழ்க்கையில் நாம் பார்க்கலாம். எல்லாரும் யுத்தத்துக்கு போன நேரத்தில் இவர் அங்கே போய் நின்று எதார்த்தமாக ஒரு பெண் குளிப்பதை பார்க்கிறார். முதல் முறை பார்த்ததில் தப்பில்லை. ஆனால் அதே இடத்தில் நின்றுகொண்டு இன்னும் அதிகமான நேரம் நாம் பார்க்கும்போது கண்டிப்பாக எப்பேர்பட்ட மனிதராக இருந்தாலும் அந்த பாவத்தில் விழுந்து விடுவார்கள். இதேபோல்தான் தாவீது விழுந்துவிட்டார். நாம் எவ்வளவுதான் ஆவிக்குரியவர்களாக இருந்தாலும் எவ்வளவுதான் சத்தியத்தை கேட்டிருந்தாலும் மறுபடியும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் கண்டிப்பாக நாம் இந்தச் இச்சையின் பாவத்தில் விழுந்து விடுவோம். முதல் முறை எதார்த்தமாக நடப்பது வேறு. ஆனால் மறுபடியும் மறுபடியும் திரும்பி பார்த்து நாமே அந்த இச்சைக்குள் விழுவது வேறு. எனவே முதல் முறை பார்க்கும் போதே நாம் அந்த இடத்தை விட்டு விலகி இயேசுவின் நாமத்தினாலே அப்பாலே போ சாத்தானே

என்று கடிந்து கொள்ளும் போது அந்தப் பாவத்திலிருந்து விழாமல் நாம் தப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை அந்த நேரத்தில் நாம் சத்தமாக அந்த ஆவியை கடிந்து கொள்ள முடியாவிட்டாலும் நம் மனதிற்குள்ளேயே அந்த ஆவியை கடிந்து கொள்ளும் போது நாம் அந்த பாவத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.வேலை பார்க்கும் இடத்திலேயோ அல்லது ரோட்டிலேயோ மனதிற்குள்ளேயே அந்தத் தருணத்திலேயே நாம் கடிந்து கொள்ளும் போது அந்த ஆவி நம்மை விட்டு விலகும். அடுத்ததாக நாம் பார்க்கும்போது நம்முடைய சரீரத்தை கிறிஸ்துவின் சரீரம் என்று நினைக்க வேண்டும். இது என்னுடைய சரீரம் தான். நான் விருப்பப்படுவது எல்லாமே செய்வேன் என்று நினைக்க கூடாது. கிறிஸ்தவர்களாக இருக்கும்போது ஒரு தெய்வ பயம் நமக்குள் இருக்க வேண்டும். இது நம்முடைய சரீரம் அல்ல. கிறிஸ்து நமக்குள் வாழ்வதால் இது கிறிஸ்துவின் சரீரம். எனவே தேவனுக்கு பயந்து நாம் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும். இது என்னுடைய சரீரம் தான்.எனக்கு விருப்பப்படி எல்லாமே நான் செய்வேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. என்னை கேட்க யார் உள்ளார்கள். என்னை யாராலும் தடுக்க முடியாது என்று நாம் இருக்கவே கூடாது. கண்டிப்பாக ஒரு நாள் ஆண்டவர் வந்து நம்மிடம் கணக்கு கேட்பார். ஏனென்றால் இது ஆண்டவருக்குரிய சரீரம். ஆண்டவர் கண்டிப்பாக கணக்கு கேட்பார். கடைசியாக பார்த்தோமானால் 1பேதுரு 2:9 நீங்கள் பரிசுத்த ஜாதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.கர்த்தர் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்றால் ஒரு பரிசுத்த ஜாதியாக பார்க்கிறார். நாம் யார் ?நாம் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோம்? நம்முடைய அழைப்பு என்ன? ஆண்டவர் நம்மை குறித்து என்ன தரிசனம் வைத்திருக்கிறார்? இதையெல்லாம் பற்றி தெளிவான மனதுடன் நாம் இருக்கும் போது கண்டிப்பாக நாம் இந்த இச்சையின் பாவத்திலிருந்து விலகலாம். நம்மை நாமே நான் ஒரு அசுத்தமானவன், அசுத்தமானவள், என்னால் பரிசுத்தமாக வாழ முடியாது என்று நம்மை நாமே சொல்லிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக இந்த பாவத்திலிருந்து நாம் வெளியே வர முடியாது. ஆண்டவர் என்னை பரிசுத்த ஜாதியாக தான் பார்க்கிறார். கண்டிப்பாக நான் ஒரு பரிசுத்த ஜனமாக வாழ்வேன் என்று நாம் தினம் தினம் அறிக்கை செய்யும்போது அந்த அசுத்தம், அசுத்தமான எண்ணங்கள் ,அசுத்தத்தை கொண்டுவருகிற ஆவிகள் எல்லாமே வெளியே போகும். நம்மை நாமே குறைத்து பார்க்க கூடாது. கர்த்தர் நம்மை எப்படி பார்க்கிறாரோ அதே போலவே நாம் நம்மை பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது கண்டிப்பாக இச்சையின் பாவத்திலிருந்து வெளியேறலாம். தாவீதைப் போல கர்த்தருடைய பாதத்தில் விழுந்து கர்த்தாவே என்னால் இது முடியவில்லை என்று கதறி அழுகும் போது நிச்சயமாக கர்த்தர் நம்மை விடுவிப்பார். அதற்காக நாம் ஒரே பாவத்தை திரும்ப திரும்ப செய்து விட்டு வந்து கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு விடலாம், அவர் மன்னிக்கும் தெய்வம் தானே என்று மறுபடி மறுபடி இந்த பாவத்தை செய்யக்கூடாது.

ரோமர் 13:14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.

தாவீது ஒரு முறை தான் அந்த பாவத்தை செய்தார். அந்த பாவத்தை செய்ததற்காக மனஸ்தாபப்பட்டு அழுது மறுபடி அவர் அந்த பாவத்தை செய்யவில்லை. அதுபோலவே ஒருவேளை நீங்கள் இந்த பாவத்தில் சிக்கி இருந்தால் மனஸ்தாபப்பட்டு அவருடைய பாதத்தில் விழுந்து அழுகும் போது கர்த்தர் நிச்சயம் விடுதலையாக்குவார்.

II தீமோத்தேயு 2:22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

இச்சையான பாவம் நம்மிடத்தில் வர முயற்சிக்கும் போது ஒரு நிமிடம் அந்த கல்வாரி சிலுவை நோக்கி பார்க்கும் போது நமக்காக ஆண்டவர் அடிக்கப்பட்டதும், நம்முடைய இச்சைக்காக அவர் நொறுக்கப்பட்டதை , நாம் நினைவு கூறும்போது நம்மால் எந்த அசுத்தங்களையும், பாவமான இச்சைகளையும், செய்யாதபடிக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். நாம் பாவம் செய்கையில் நமக்காக பரிதவிக்கிற ஆவியானவர் நமக்காக அழுது கொண்டிருப்பார் என் பிள்ளை, என் மகன், என் மகள், என்னிடத்தில் வரமாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருக்கிற தேவன் அவர். அவர் நம் கண்களுக்கு தெரியாவிட்டாலும் நாம் எங்கு இருந்தாலும் ஆண்டவர் நம்மோடு கூடவே இருக்கிறார். பாவத்தை வெறுத்து பரிசுத்தமான அந்த வாழ்க்கையை வாழும்போது நமக்கு தடைபட்டு இருக்கிற எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் தருவதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உண்மையுள்ள தேவனாக இருக்கிறார். இதை வாசிக்கிற அன்பு மகனே, மகளே, பரிசுத்த ஆவியானவர்

உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்., மனம் திரும்பு, நான் உனக்குள் வந்து வாழ விரும்புகிறேன் நீ என் மகனாக, மகளாக, நான் உன் தகப்பனாக, உன் கூடவே இருந்து உன்னை எப்பொழுதும் சுமந்து உன்னை பரிசுத்தமான வாழ்க்கை வாழ, நான் உனக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். நீ என்னுடைய கரத்தில் உன்னுடைய இருதயத்தை கொடு நான் உனக்கு விடுதலையை தருவேன்.

கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

மேலே சொல்லிய வழிகளை நாம் பின்பற்றும் போது நிச்சயமாக தேவன் இந்த இச்சையின் பாவத்திலிருந்து நம்மை விடுதலையாக்குவார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.