Shamla,(ஆஸ்திரேலியா)

என் பெயர் Shamla,, (ஆஸ்திரேலியா) சகோதரிகள் JasJemi வீடியோக்கள் மூலம் இயேசு கிறிஸ்து என் வாழ்க்கையில் எப்படி அற்புதங்களைச் செய்தார் என்பதற்கான எனது சாட்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு நிறுவனத்தில் 5 வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல், உயர்வும் இல்லாமல், அதே வேலையை எந்த மாற்றமும் இல்லாமல் செய்து கொண்டிருந்தேன், அப்போதுதான் JasJemi யூடியூப் சேனலில் “மாற்றம் எப்போது வரும்?என்ற காணொளி மூலம் பரிசுத்த ஆவியானவர் என் வேலையைப் பற்றி என்னிடம் பேசினார். இந்த வீடியோவில், சகோதரிகள் நம் வாழ்வில் மாற்றத்தை எதிர்பார்ப்பது மற்றும் பார்க்க விரும்புவது பற்றி பேசினர்கள், மேலும் நீண்ட காலம் ஒரே நிலையில் அல்லது அதே இடத்தில் நமக்கேற்றபடி இருக்கக்கூடாது. ஆண்டவர் நம்மை மேலும் மேலும் வளர வேண்டும், ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார் என்று கூறினார்கள். இந்தக் காணொளி எனது வேலையைப் பற்றி சிந்திக்கவும், உணரவும் வைத்தது, மேலும் எனது வேலையை ஆண்டவர் விரும்பியபடி மாற்றவும், நான் அதே நிலையில் இருக்காமல் மேலும் வளர வேண்டும் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொண்டேன். இந்த வீடியோவுடன் “காத்திருப்பு காலத்தில் என்ன செய்ய வேண்டும்” என்ற மற்றொரு வீடியோவையும் பார்க்க நேர்ந்தது, இதன் மூலம் ஆண்டவர் என்ன சொல்கிறார் என்று தியானித்தேன், புதிய வேலைக்காக எனது காத்திருப்பு காலத்தில் இந்த வீடியோவில் சகோதரிகள் சொன்ன அனைத்தையும் பின்பற்றினேன். நம்பிக்கையுடன் நான் ஏற்கனவே என் இதயத்திலும், மனதிலும் புதிய வேலையை உணர்ந்தேன், உண்மையாக கர்த்தருக்காக காத்திருந்தேன், இதற்கிடையில் எனது முயற்சியால் நிறைய நேர்காணல்கள் கொடுத்தேன். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை, ஆனால் நான் இந்த விருப்பத்தை முழுமையாக ஆண்டவரிடம் சமர்ப்பித்து காத்திருந்தேன்.நான் எதிர்பார்க்காத மிகச் சிறந்த சம்பளத்துடன் நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சரியான நேரத்தில் இயேசு கிறிஸ்து எனக்கு ஒரு வேலையைக் கொடுத்தார். இந்த வீடியோக்களை சகோதரிகள் மிகுந்த ஜெபம் மற்றும் அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள், பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரிடமும் அவர்களின் வீடியோக்களைப் பார்த்து, நாம் செல்ல வேண்டிய பாதையில் நம்மை வழிநடத்துகிறார். கர்த்தராகிய இயேசுவுக்கே எல்லா மகிமையும் துதியும் கனமும்.. ஆண்டவர் JasJemi சகோதரிகளின் குடும்பத்தை ஆசீர்வதிப்பார், மேலும் அவர்களை இயேசு கிறித்துவின் நாமத்தில் மென்மேலும் பயன்படுத்தட்டும். ஆமென்.

 

மாற்றம் எப்போது வரும்? (https://bit.ly/3GYo3eG

“காத்திருப்பு காலத்தில் என்ன செய்ய வேண்டும்” (https://bit.ly/3F3lbfg)

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

Leave a Reply

Your email address will not be published.