Testimony

அபிதா. (கன்னியாகுமரி)

என்னுடைய பெயர் அபிதா. என் அண்ணி பெயர் ஷானி. அவர்கள் வயிற்றில் கட்டி இருந்தது. அதினால் மூளைக்கு செல்லும் நரம்புகளில் oxygen செல்ல முடியாமல் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆரோக்கியம்(Critical Condition) மிகவும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்த்தோம்.சிகிச்சை பல நடந்தது. ஆனால், பெரிதான முன்னேற்றத்தை காண முடியவில்லை.அவர்கள் பேசவோ நடக்கவோ முடியாத நிலையில் படுக்கையில் இருந்தார்கள். ஆனால் கர்த்தர் ஜீவனை காத்து நடத்தி வந்தார். நவம்பர் முடிந்தது. […]

பெயர் வெளியிட விரும்பாத சகோதரி.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என்னுடைய குடும்பத்தில் நான் மட்டுமே இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளேன்.JasJemi YouTube Channel எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. இதன் மூலமாக நான் நிறைய கற்றுக்கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு நான் மரண பயத்திற்கும், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுதலை பெறவும் ஜெபிக்குமாறு பாஸ்டரிடம் கேட்டு கொண்டேன்.  “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்”-ணு சொல்லுங்க, சரி ஆகும், உங்களுக்காக நாங்களும் ஜெபிக்கிறோம் என்று பாஸ்டர் சொன்னார்கள். இப்பொழுது எனக்கு சுகம் ஆகி விட்டது. ஜெபத்திற்கு […]

மகேஸ்வரி (எ) மெர்சி, கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர்.

என் பெயர் மகேஸ்வரி (எ) மெர்சி, நான் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் வசித்து வருகிறேன். நான் JasJemi channel மூலமாக பாஸ்டர்.சுந்தர் சிங் அவர்களை தொடர்புகொண்டு என் திருமணத்திற்காக ஜெபிக்க சொல்லியிருந்தேன். எனக்கு 2021 டிசம்பர் 10ஆம் தேதி திருமணம் நடந்தது. நான் பெலவீனம் உள்ளவள். ஆனாலும் கர்த்தருடைய கிருபையால் எனக்கு அன்பான நல்ல ஒரு Life partner ஆண்டவர் கொடுத்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எனக்கு ஜெபித்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் ஊழியத்திற்கும் மனமார்ந்த நன்றி.. […]

சுபா. (நெல்லை)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என் பெயர் சுபா. (நெல்லை) எனக்கு திருமணம் ஆகி இரண்டு மாதம் தான் ஆகிறது. ஆனாலும் பலவித பிரச்சனைகள், போராட்டங்கள் வந்தது புதுமுகம், புது இடம், புதிய நபர்கள், எனக்கு புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தது. எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், என் அம்மா வீட்டில் என்னை கொண்டு வந்துவிட்டார்கள். என்னுடைய கணவருக்கு என் அம்மா வீட்டில் என்னை கொண்டுவிட இஷ்டம் இல்லை. ஆனாலும் என்னுடைய வற்புறுத்தலால் என்னை கொண்டு வந்துவிட்டார். […]

Sajina Harvey, (Chennai)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். எனது பெயர் Sajina Harvey. நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது (2019 October). 2020 may மாதம் conceive ஆனேன். இரண்டு மாதங்களில் abortion ஆயிடுச்சு. மன வருத்தத்துக்கு உள்ளானேன். அப்பொழுது தான் உங்களுடைய JASJEMI YouTube channel ல் “வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்வது எப்படி” என்ற வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவின் மூலமாக கர்த்தர் என்னோடு பேசினார். அதற்கு முன்பாக எனக்கு, […]

இம்மானுவேல் (கரூர்).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. என்னுடைய பெயர் இம்மானுவேல் நான் 7 மாத குழந்தையாய் வயிற்றில் இருக்கும் போது என்னுடைய போதகர் மூலமாக இந்த பெயர் கொடுக்கப்பட்டது. நான் கரூரில் வசித்துவருகிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துவந்தேன்., நான் உன்னை குணமாக்குவேன் என்று ஆண்டவர் திட்டமும் தெளிவுமாய் பேசினார். ஆனால் 9 மாதங்களாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் எனது சரீரத்தில் காணவில்லை. அந்த நேரத்தில் தான் JASJEMI யூடியூப் மூலமாக அடையாளம் கேட்டு […]

பெயர் வெளியிட விரும்பாத சகோதரி.

நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தை சேர்ந்தவள். என்னோட சின்ன வயசுல இருந்தே ஆண்டவரை பிடிக்கும். ஏதோ எனக்கு தெரிஞ்ச முறையில் ஆண்டவரை பின்பற்றி வந்துட்டு இருந்தேன்., லாக்டவுன் ஒரு நாள் உங்க JASJEMI யூடியூப் சேனல் பார்த்தேன். உங்க வீடியோஸ் மூலமா நிறைய விஷயங்கள் ஆண்டவரை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உங்களோட ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதாக இருந்துச்சு. நான் காலேஜ் முடிச்சுட்டு அரசாங்க வேலைக்காக ஐந்து வருடம் முயற்ச்சி பண்ணிட்டு இருந்தேன்., எனக்கு கிடைக்கல. உங்க சேனல்ல […]

ரவிச்சந்திரன். (கோயம்புத்தூர்).

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.. என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். நான் கோயம்புத்தூர் பட்டணத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு வியாபாரத்தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக சில மாதங்களாக ஒரு நல்ல இடத்தில் கடை வாடகைக்கு பார்த்து வந்தேன். சரியான இடத்தில் கடை அமையாத நிலையில் கடந்த 31/03/2021 அன்று பாஸ்டர் சுந்தர்சிங் ஐயா அவர்களிடம் போன் மூலமாக தொடர்பு கொண்டு என்னுடைய சூழ்நிலையை சொன்னேன். அவர் பல நிமிடங்கள் பேசி ஆறுதல் படுத்தினார். அவரிடம் சொன்ன […]

எஸ்தர் (சென்னை).

கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். அவருடைய நாம மகிமைக்காக ஒரு சாட்சி சொல்கிறேன். என் பெயர் எஸ்தர்.நான் ஒரு கிறிஸ்தவ பெண். என் கணவரும் கணவர் வீட்டில் உள்ளவர்களும் இரட்சிக்கப்படாமல் இருக்கிறார்கள் . நான் சில மாதங்களாக JasJemi சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் சென்னையில் வசிக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இரண்டாவதாக என்னுடைய மகன் வயிற்றில் இருக்கும் போது எனக்கு பிரஷர்(pressure)அதிகமானது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் எல்லாரும் பிரஷர் […]

தமிழ் மொழி (ஆத்தூர், சேலம்).

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நான் செய்கிற வேலையில் எனக்கு ஆசீர்வாதமே இல்லை, நான் செய்கிற வேலையில் எனக்கு Target இருக்கிறது, என்னுடைய owner கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். அப்பொழுது JASJEMI யூடூப்பில் வன்கண், பொறாமை பற்றி வீடியோவை நான் பார்க்கும்படி உணர்வு வந்தது, அன்று அதிகாலை அந்த வீடியோவை பார்த்தேன், சகோதரி சொன்னது போல நான் ஜெபித்ததும், என்னுடைய வேலையில் நல்ல மாற்றம் தெரிகிறது., […]